உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 4 ரயில்கள் தாமதம்; கூட்ட நெரிசல் இல்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

டில்லியில் 4 ரயில்கள் தாமதம்; கூட்ட நெரிசல் இல்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

புதுடில்லி: புதுடில்லி ரயில் நிலையத்தில் 4 ரயில்கள் தாமதமானதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. 'கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.டில்லி ரயில் நிலையத்தில் நேற்றிரவு பல ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 12 மற்றும் 13வது நடை மேடைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முதலில் இரவு 8:05 மணிக்குப் புறப்பட வேண்டிய சிவகங்கா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகி, இறுதியில் இரவு 9.20 மணிக்குப் புறப்பட்டது.இரவு 9.15 மணிக்குப் புறப்பட இருந்த சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்திருந்த போதிலும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஜம்மு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (இரவு 9.25 மணிக்குப் புறப்பட வேண்டியது) மற்றும் லக்னோ மெயில் (இரவு 10 மணிக்குப் புறப்பட வேண்டியது) இரண்டுமே தாமதம் ஆனது. இது மட்டுமின்றி இரவு 9.05 மணிக்குப் புறப்பட வேண்டிய மகத் எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வரவே தாமதம் ஆனது. இந்நிலையில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !