உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ரோஹித் அதிரடியில் மும்பை அணி வெற்றி

பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ரோஹித் அதிரடியில் மும்பை அணி வெற்றி

ஐதராபாத்: பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 70 ரன்கள் எடுத்தார்.பிரீமியர் லீக் தொடரின் 41 வது லீக் போட்டி, இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்து. இதில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதின. முதலில் டாஸில் வென்ற மும்பை அணி, பீல்டிங் தேர்வு செய்தது.. .இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட், ரன் ஏதும் எடுக்காமலும் அபிஷேக் சர்மா 8, ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.அடுத்து வந்த இஷான் கிஷன் 1, நிதிஷ்குமார் 2, ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அனிகெட் வெர்மா 12 ரன்களுக்கு ஆவுட் ஆனார். ஹென்ரிச் க்ளாசன் அரைசதம்:ஹென்ரிச் க்ளாசன், அபிநவ் மனோகர் நிலைத்து நின்று ஒரளவு நிலைத்து நின்று ஆடினர். நன்றாக விளையாடிய ஹென்ரிச் க்ளாசன், அரை சதம் கடந்து, 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அபிநவ் மனோகர், 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டர்கள் உள்பட 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில், ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.மும்பை அணியின் டிரன்ட் போல்ட், சிறப்பாக பந்துவீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து மும்பை அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி.144 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணியில் முதல் விக்கெட்டாக ரையன் ரிகல்டன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 70 ரன்களிலும், வில்ஜாக்ஸ் 22 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் 15.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. சூரிய குமார்யாதவ் 40 ரன்களிலும், திலக் வர்மா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை