வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடவுள் எல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறார் என்பதை காட்டுகிறது. உயர் பதவியில் உள்ளவர்கள் சிறிது நேர்மையாக இருக்க வேண்டும்.
டேராடூன்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகண்ட் மாநிலத்தில் தரையிறக்கப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மஹாராஷ்டிரா(நவ.20) ஜார்க்கண்ட் (நவ.13 மற்றும் 20) மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. இத்துடன் 47 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வயநாடு லோக்சபாவுக்கு இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்ததுஇத்துடன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சட்டசபை தொகுதி, நந்தத் லோக்சபா தொகுதிக்கும் நவம்பர் 20 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்திருந்தது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 23 ம் தேதி நடைபெறும். இது தொடர்பான ஆய்வுக்கு சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த தலைமை தேர்தல் ஆணையருக்கு, பிற அதிகாரிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.
கடவுள் எல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறார் என்பதை காட்டுகிறது. உயர் பதவியில் உள்ளவர்கள் சிறிது நேர்மையாக இருக்க வேண்டும்.