உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தயவு செய்து தடுத்து நிறுத்துங்க... ஹேமா அறிக்கை கசிவால் சங்கடம்; நடிகைகள் கண்ணீர்!

தயவு செய்து தடுத்து நிறுத்துங்க... ஹேமா அறிக்கை கசிவால் சங்கடம்; நடிகைகள் கண்ணீர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: நடிகர்களின் பாலியல் தொந்தரவு குறித்து ஹேமா கமிட்டியிடம் புகார் அளித்த நடிகைகளின் விபரங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பெண் கலைஞர்கள் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மனியன்பிள்ளை ராஜு, எடவேலா பாபு, பாபுராஜ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது மலையாள திரையுலகை அதிர வைத்துள்ளது.இந்த நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையில் சிலர் தலையிடுவதாகவும், அதன் மூலம், புகார் அளித்த நடிகைகளின் விபரங்கள் கசிவதாக சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களை ஹேமா கமிட்டி மற்றும் சிறப்பு விசாரணை குழுவின் முன்பு நடிகைகள் அளித்துள்ளனர். ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தத் தகவலை, சில குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு கசிய விடுகின்றனர். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும். ஏற்கனவே வந்த தகவல்களின் அடிப்படையில் யார் புகார் கூறியிருக்கிறார்கள் என்பது பற்றி பொதுவெளியில் பெரும்பாலும் தெரிந்துவிட்டது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. எனவே, ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை வெளியே விடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, அண்மையில் சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nandakumar Naidu.
செப் 16, 2024 20:56

அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைத்த நடிகைகள் கதறுகிறார்கள் போல. அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த ஓநாய்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?


தாமரை மலர்கிறது
செப் 16, 2024 20:22

வெளியே லீக் ஆகிவிட்டால், வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தில் நடிகைகள் கதறினால், புகார் ஏன் கொடுக்க வரீங்க? சும்மாவேணம் ஒரு நடிகரை தண்டிக்க முடியாது. யார் புகார் கூறினார். என்ன புகார் புகாரினார். அதற்கான தண்டனை என்ன? என்று ஊருக்கு தெரியவந்தால் தான், பிற பெண்கள் பாதிக்கப்படமாட்டார்கள். பாலும் குடிக்கணும், வெளியவும் தெரிய கூடாது என்றால், போர்வையில் போர்த்திக்கொண்டு குடிக்க முடியாது.


தமிழ்வேள்
செப் 16, 2024 20:07

நடிகை கும்பலால் நாசமாகப் போன குடும்பங்களின் குடும்ப பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்டால் இந்த கூத்தாடிச்சிகள் மீது எவனுக்கும் இரக்கம் வராது....மேக்கப் இல்லாத நடிகையை விட சுடுகாட்டு பிசாசு அழகாக இருக்கும்.


தமிழ்வேள்
செப் 16, 2024 20:02

இதுங்களுக்கா வேணும்னா எதுக்கு வேண்டுமானாலும் ரெடியா இருக்கும்..விஷயம் தனி மனித உரிமை ன்னு உருட்டும்கள்.. வேணாம் னா வீடியோ வெளியீடு மீடூ... எல்லா கெரகமும் வரும்..இதுகளுக்கு மரியாதை கொடுப்பதெல்லாம் வேஸ்ட்... அய்யோ பாவம் ன்னு யாராவது உதவிக்கு போனால் அவர்கள் மீதும் மீ டூ புகார் கொடுக்கும் அல்லது காசு கேட்டு பிளாக் மெயில் பண்ணும்..போங்கடி பிழைப்பற்ற கூத்தாடிச்சிகளா..


D.Ambujavalli
செப் 16, 2024 18:47

சான்ஸுக்காக அன்று எல்லா சமரசமும் செய்த பிறகு, இன்று கும்பலாக கூக்குரல் இடுவானேன்? நாலு வருஷம் கிடப்பில் கிடந்த பொழுது யார் யார் அறிக்கையை படித்தார்களோ? அவர்கள் மூலம் விவரங்கள் கசிந்து விட்டிருக்கும் இன்று பிரபலன்களாகி உள்ள நிலையில் அந்தப் பழங்குப்பைகள் வெளிவருவதை யார்தான் விரும்புவார்கள் /


D.Ambujavalli
செப் 16, 2024 18:43

யார் மேல் புகார் கொடுக்கப்பட்டதோ, அவர்கள் 'அன்று சான்சுக்காக எதற்கும் தயாராக இருந்துவிட்டு இன்று உத்தமிகள் போலாகி


sankaran
செப் 16, 2024 16:43

அப்போ கொடுத்த புகாரை எப்படி நம்புவது?.. போலீஸ் FIR ல யார் புகார் கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும்.. அப்ப கூட பொய் புகார் , பொய் கேஸ் என்று முடிகிறது ... இவர்கள் கேட்பது எப்படி என்றால் ..புகார் குடுப்பேன்.... பொய்யா கூட இருக்கலாம், நடடிக்கையும் எடுக்க வேண்டும்...இது என்ன நியாயம் ?.. வயநாட்டு சம்பவத்தை திசை திருப்புவதற்கே கேரளா அரசு இப்போ கையில் எடுத்துள்ளது..


ஆரூர் ரங்
செப் 16, 2024 14:12

நான்காண்டுகளாக அறிக்கையையே கிடப்பில் போட்ட அரசு நடவடிக்கை எடுக்குமென இன்னும் நம்புகிறீர்களா? தவறான ஆளிடம் முறையிடுவது அறிவிலிகள் மட்டுமே செய்வது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை