உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிரித்துக்கொண்டே, கையசைத்தபடி கோர்ட்டில் ஆஜரான ஹேமந்த் சோரன்

சிரித்துக்கொண்டே, கையசைத்தபடி கோர்ட்டில் ஆஜரான ஹேமந்த் சோரன்

ராஞ்சி : நில அபகரிப்பு வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களை புறக்கணித்த முதல்வர் சோரன், எட்டாவது சம்மனுக்கு பதிலளித்தார்.கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள வீட்டில் அவரிடம் ஏழு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். பின் ஜனவரி 29 அல்லது 30ல் மீண்டும் ஆஜராகும்படி தெரிவித்தனர்.திடீரென தலைமறைவான நிலையில் நேற்று இரவு கவர்னர் மாளிகை வந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காவலில் வைத்துள்ளனர்.இவர் மீதான வழக்கில் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் சோரனை இன்று காலை காலை ஆஜர்படுத்தினர். இதற்காக வாகனத்தில் இருந்து இறங்கிய சோரன், நீதிமன்றத்திற்குள் செல்லும் வரை புன்னகைத்தபடியும், தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார்.இதனிடையே, தனது கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathyam
பிப் 01, 2024 19:16

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்


duruvasar
பிப் 01, 2024 11:43

கபில்சிபல் ஆஜர்.


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:28

இவனெல்லாம் முதலமைச்சர். கலிகாலம்


sankaranarayanan
பிப் 01, 2024 08:17

இனி இந்தியாவில் அரசியல் குற்றங்கள் செய்த அரசியல்வாதிகளின் எண்ணிக்கை சிறைச்சாலையில் அதிகரிக்கும் ஆதலால் சிறைச்சாலையை புதுப்பித்து விரிவாக்கினாலே இட பற்றாக்குறை தீரும்


A1Suresh
பிப் 01, 2024 07:45

ஏ.வ.வேலு , துரைமுருகன், பித்தளை தென்னரசு, கே கே கே கே கே கே எஸ் எஸ் எஸ் எஸ் ஆர் , பெரியசாமி, சின்னச்சாமி என்று லிஸ்டு நீளும். கடைசியாக மருமகன், மகன் சகிதமாக முதல்வர். ரெடியா இருங்க .........


Duruvesan
பிப் 01, 2024 06:32

ஆக கெஜ்ரி உடன் எல்லா மினிஸ்டர் MP COUNSELLOR ஜெயிலுக்கு செல்ல ரெடி


குமரி குருவி
பிப் 01, 2024 05:55

மாநில முதல்வர்களைஅமுலாக்கத்துறை கைதுபண்ணுவது ..ஊழல்முதல்வர்களை பயப்படுத்தி திருந்த வைக்கும்


Kasimani Baskaran
பிப் 01, 2024 05:41

ஹிந்திக்கூட்டணிக்கு உலை வைத்த முதல் உதையண்ணா. அடுத்து சோரன் குடும்பம்... இன்னும் அதிகம் வரும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை