உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரம்பரிய கோட்டை சுற்றுலா: மஹாராஷ்டிரா அரசு அழைப்பு

பாரம்பரிய கோட்டை சுற்றுலா: மஹாராஷ்டிரா அரசு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலத்தில், 350க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க, அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய பாரம்பரிய கோட்டைகள் உள்ளன. அவற்றை காண, அம்மாநில சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்து தருகிறது.மஹாராஷ்டிரா மாநிலம் வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. இங்குள்ள 350க்கும் மேற்பட்ட, கம்பீரமான கோட்டைகள், பல்வேறு வரலாறுகளை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு கோட்டையும் தனித்துவம்மிக்கது. சத்ரபதி சிவாஜி மகாராஜா மற்றும் மராட்டிய மன்னர்களின் கட்டடக்கலை அற்புதங்களை, கோட்டைகளில் காண முடியும். இவை வரலாற்று ஆர்வத்தை துாண்டுபவையாகவும், சுற்றுலாப் பயணியர் காண வேண்டிய இடங்களாகவும் உள்ளன.சிந்துதுர்க் கோட்டை: இந்த கோட்டை சத்ரபதி சிவாஜி மகாராஜாவால், 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மராட்டிய மாநில வீரத்தின் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. புகழ்பெற்ற மன்னருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாக உள்ளதுமுருத் ஜஞ்சிரா: மும்பையில் இருந்து தெற்கே 165 கி.மீ., தொலைவில் கடற்கரையோரம் அமைந்துள்ள கோட்டை. இக்கோட்டை, 16 சுற்றுகளாக அமைக்கப்பட்டுள்ளதுவிஜயதுர்க் கோட்டை: 'ஈஸ்டர்ன் ஜிப்ரால்டர்' என அழைக்கப்படும் இந்த கோட்டை, சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் தனிப்பட்ட முறையில் கைப்பற்றப்பட்டது. மராட்டிய மாநில வரலாற்றில் இடம்பெற்றுள்ள முக்கியமான கோட்டைஷிவ்னேரி கோட்டை: சத்ரபதி சிவாஜி மகாராஜா பிறந்த இடம். அம்புக்குறி வடிவம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் தனித்துவமாக, இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளதுசிங்ககாட் கோட்டை: இது, சிங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோட்டை, கடல் மட்டத்தில் இருந்து 1,316 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளதுபிரதாப்காட் கோட்டை: கி.பி., 1656 - -58ல் கட்டப்பட்டது. இந்த மலைக்கோட்டையின் சுவர்கள் பிரமிக்க வைக்கின்றனலோஹாகாட் கோட்டை: மஹாராஷ்டிராவின் பழமையான கோட்டைகளில் ஒன்றாக உள்ளது. கர்லா மற்றும் பாஜா குகைகளின் அற்புதமான காட்சிகளை பார்க்கலாம். இது மலையேறும் சாகசப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க, பாரம்பரிய கோட்டைகள் மற்றும் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணியருக்கு தேவையான ஏற்பாடுகளை, மஹாராஷ்டிரா மாநில சுற்றுலாத் துறை செய்து தருகிறது. கூடுதல் விபரங்களுக்கு, 94038 78864 என்ற மொபைல் எண், maharashtratourism.gov.inஎன்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், www.maharashtratourism.gov.inஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
அக் 20, 2024 07:34

பல கோட்டைகள் மொகலாயர்களை வீழ்த்த வீர சிவாஜி செய்த சாகசங்களை பறைசாற்றுபவை - ஆகவே அது காங்கிரஸ் கோஷ்டிக்கு பிடிக்காது. இந்த அடிப்படையில் பல கோட்டைகள் பிரபலப்படுத்தப் படவில்லை. செல்லும் வழிப்பாதைகள் கூட சிக்கலானவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை