மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
டில்லி: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாடு திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ரூ.15 லட்சம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. அணி வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பதக்கம் வென்ற அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று ஹாக்கி சம்மேளனம் அறிவித்தது. உற்சாக வரவேற்பு
இந்நிலையில், வெண்கலப்பதக்கத்துடன் ஹாக்கி அணியினர் இன்று நாடு திரும்பினர். டில்லி விமான நிலையம் வந்த அவர்களை இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். பதக்கத்தை அணிந்தபடி வந்த ஒவ்வொரு வீரரின் கழுத்திலும் மாலை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.மகிழ்ச்சி நடனம்
வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்த வீரர்கள் பலர் அங்கேயே உற்சாக நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தனர். ஆடவர் அணி வீரர்களுடன் வந்திருந்த ஹாக்கி மகளிர் அணி வீராங்கனைகளுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7