250 சி.சி.,யில் ஹீரோவின் முதல் பைக்
புதுடில்லி:'ஹீரோ மோட்டோ கார்ப்' நிறுவனம், ஆறுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தி, நான்கு வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஜூம் 125, ஜூம் 160 ஆர்' என்பவை ஸ்கூட்டர்கள், 'எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250 ஆர்' போன்றவை பைக்குகள். ஜூம் 125
இந்த ஸ்கூட்டரின் விலை, 86,900 ரூபாய். டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும், அதே 124 சி.சி., சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் இதிலும் உள்ளது. சொகுசு கார்களில் உள்ள இன்டிகேட்டர்கள், ப்ளூடூத் இணைப்பு, டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ஜூம் 160
மேக்ஸி ஸ்கூட்டர் வகையில், ஹீரோவின் முதல் ஸ்கூட்டர் இது. இதன் விலை, 1.49 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், புதிய 156 சி.சி., சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்பல்ஸ் 210
இந்த அட்வெஞ்சர் பைக்கின் விலை, 1.76 லட்சம் ரூபாய். இதில், கரிஷ்மா இசட்.எம்.ஆர்., 210 பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பைக்கின் பயன்பாட்டிற்கு ஏற்ப சீரமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர்
ஹீரோ நிறுவனத்தின், அதிக ஆற்றல் உடைய பைக் இது. இதன் விலை, 1.80 லட்சம் ரூபாய். இதில், 250 சி.சி., லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜிக்ஸர் 250, டியூக் 250 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்களின் முன்பதிவுகள் அடுத்த மாதம் துவங்குகிறது. வினியோகம் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்.