வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாடு நாசமாப் போறதுக்கு நீதிமன்றங்கள் முக்கிய காரணம். இடைக்கால தடை விதிச்சுட்டு தூங்கப் போயிடுவாங்க. விசாரிக்காமலேயே மூணுவருஷம் ஓடிடும். அப்புறம் ஆட்சி மாறினால் பேசுனது மறந்து போயிடும்.
பெங்களூரு: வக்பு வாரிய சொத்து தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை மீதான வழக்குக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.ஹாவேரி, ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன் சவனுாரில் பசவராஜ் பொம்மை, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், 'சவனுாரில் நின்று எங்கு கல்லெறிந்தாலும், அது விழுந்த இடம் வக்பு சொத்து என, கூறுவதை போன்றுள்ளது. கண்ட, கண்ட இடங்களை வக்பு சொத்து என்கின்றனர்' என்றார்.இவர் மத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, காங்கிரசார் குற்றம்சாட்டி, போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பசவராஜ் பொம்மை மீது, வழக்கு பதிவானது.தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், தற்போதைக்கு பசவராஜ் பொம்மை மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என, உத்தரவிட்டு இடைக்கால தடை விதித்தது.
நாடு நாசமாப் போறதுக்கு நீதிமன்றங்கள் முக்கிய காரணம். இடைக்கால தடை விதிச்சுட்டு தூங்கப் போயிடுவாங்க. விசாரிக்காமலேயே மூணுவருஷம் ஓடிடும். அப்புறம் ஆட்சி மாறினால் பேசுனது மறந்து போயிடும்.