உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழிப்பறையில் இருந்து ஆஜர்; அதிர்ந்து போன ஐகோர்ட் நீதிபதி

கழிப்பறையில் இருந்து ஆஜர்; அதிர்ந்து போன ஐகோர்ட் நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் உயர் நீதிமன்றத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த விசாரணையின் போது, புகார் மனுதாரர் கழிப்பறையில் இருந்து ஆஜரான, 'வீடியோ'வுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி நிர்சார் எஸ்.தேசாய், செக் மோசடி வழக்கு ஒன்றை விசாரித்தார். புகார் மனுதாரர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரானார். அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். கணினி திரையில், புகார் மனுதாரரின் பெயர் இருக்கும் இடத்தில், 'சமத் பேட்டரி' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. அது, அவர் நடத்தும் தொழில் நிறுவனத்தின் பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரானவரை பார்த்ததும், நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர் காதில், 'இயர்போன்'களை மாட்டியபடி, மேற்கத்திய கழிப்பறை இருக்கையில் அமர்ந்தவாறு பேசினார். பின் மொபைல் போனை தரையில் வைத்துவிட்டு, அவர் சுத்தம் செய்து கொள்ளும் காட்சியும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.இதேபோன்று கடந்த மார்ச் மாதம், கழிப்பறையிலிருந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைந்த ஒருவருக்கு, குஜராத் உயர் நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதமும், சமூக சேவையில் ஈடுபடும்படியும் தண்டனை விதித்தது.அந்த சம்பவத்திற்கு ஒரு மாதம் முன், படுக்கையில் படுத்தபடி விசாரணையில் பங்கேற்ற மற்றொரு நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர், கழிப்பறையில் இருந்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றதற்கு கண்டனங்கள் குவிகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூன் 28, 2025 10:25

அவசரமா வந்துருச்சு. என்ன பண்ணுவான்? ஒரு நிமிஷம் லேட் ஆனாலும், கோர்ட் காண்டாயி ஒருதலையா தீர்ப்பு வழங்கிரும்.


எஸ் எஸ்
ஜூன் 28, 2025 07:17

வெட்கம் கெட்டவன். அபராதம் விதிக்க வேண்டும்


சண்முகம்
ஜூன் 28, 2025 05:08

அவ்வளவு தான் மதிப்பு.


Rajasekar Jayaraman
ஜூன் 28, 2025 05:06

லஞ்சம் பெருப்பவர்களை தப்பிக்க விடுபாவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.


MARUTHU PANDIAR
ஜூன் 28, 2025 03:09

அற்ப பதர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை