உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 3 லட்சம் மரக்கன்றுகள் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டில்லியில் 3 லட்சம் மரக்கன்றுகள் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி:தலைநகர் டில்லியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடுவது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க பொதுப்பணித் துறைக்கு டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.தலைநகர் டில்லியில் மரக்கன்றுகள் நடுவது தொடர்பான பொதுநல வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.டில்லி அரசின் பொதுப்பணித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,“செடிகள் மற்றும் 3 லட்சம்மரக்கன்றுகள் நடுவதற்கு இடங்களை கண்டறிந்த பிறகு பணிகள் துவக்கப்படும்.தோட்டம் மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும்” என,வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து, நீதிபதி ஜஸ்மீத் சிங் பிறப்பித்த உத்தரவு:டில்லி மாநகரில் நடப்படும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான போட்டோக்கள்ஆகியவற்றுடன் பிரமாணப் பத்திரத்தை பொதுப்பணித்துறை இந்தநீதிமன்றத்தில் அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்.அதேநேரத்தில், மாற்றுக் காடுகளை உருவாக்க நிலம் உள்ளதா என்பதைடில்லி மேம்பாட்டு ஆணையம் தெரிவிக்க வேண்டும்.மேலும், ஏற்கனவே நடப்பட்ட மரங்கள் காய்ந்து விடுவதைத் தடுக்க டில்லி மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்துவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். கடைகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து, சில கடைக்காரர்கள் மரக்கன்றுகளை வேரோடு பிடுங்குவர். அதைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 20ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ