உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் மின் விளக்கு எரியவில்லை: பாலக்காட்டில் காங்., ஆர்ப்பாட்டம்

உயர் மின் விளக்கு எரியவில்லை: பாலக்காட்டில் காங்., ஆர்ப்பாட்டம்

பாலக்காடு: பாலக்காடு சந்திப்பில், உயர்மின்விளக்கு எரியாததை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கேரள மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையம். ஏராளமான பயணியர் வந்து செல்லும் இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில், நகராட்சி அமைத்துள்ள உயர்மின்விளக்கு பராமரிப்பின்றி நீண்ட காலமாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இருளில் மூழ்குகிறது. இந்நிலையில், இது எரியாததை கண்டித்து நேற்று முன்தினம் இரவு காங்., பாலக்காடு டவுன் மேற்குத் தொகுதி கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தை பாலக்காடு வட்டார கமிட்டி தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார். தொகுதி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராதா, உட்பட பலர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ