உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம்: சத்தீஸ்கர் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம்: சத்தீஸ்கர் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சத்தீஸ்கரின் ஆறு மாவட்டங்களில், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அபாயகரமான அளவுக்கு, குடிநீரில் யுரேனியம் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.குடிநீரில் கலந்திருக்கும் யுரேனியம் அளவு, லிட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்குள் இருப்பது பாதுகாப்பானது என, உலக சுகாதார நிறுவனம், 2017ல் தெரிவித்தது. இதற்கு மேல் அளவு கூடும்போது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்து இருந்தது.100 மைக்ரோ கிராம்இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், 1 லிட்டர் குடிநீரில், 30 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பதை அனுமதிக்கின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையம் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வு முடிவில், 1 லிட்டர் குடிநீரில், 60 மைக்ரோ கிராம் அளவு வரை யுரேனியம் கலந்திருப்பது ஆபத்தை விளைவிக்காது என்று தெரிவித்தது.இந்நிலையில், சத்தீஸ்கரின் துர்க், ராஜ்நந்தகாவ்ன், காங்கர், பெமேதரா, பலோட், கவர்தா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மக்கள் குடிக்க பயன்படுத்தும் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில், 1 லிட்டர் குடிநீரில் 100 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்தது. பலோட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 1 லிட்டர் நிலத்தடி நீரில் 130 மைக்ரோ கிராம் யுரேனியம் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த ஆறு கிராமங்களிலும், 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், மாநில பொது சுகாதாரத் துறையிடம் அளிக்கப்பட்டு மறுபரிசோதனை செய்ததில், யுரேனியம் அளவு அபாயகரமான அளவை தாண்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எச்சரிக்கைஇந்த தண்ணீரை குடிப்பதால், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நுரையீரல் மற்றும் தோல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். நம் நாட்டில், நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகமாக காணப்படுவது இது முதல்முறை அல்ல. பஞ்சாப், ஹரியானா உட்பட 12 மாநிலங்களில், நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகம் காணப்படுவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த ஜனவரியில் எச்சரித்தது. இதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா, நாட்டுக்கு தேவையான கோதுமையில், 50 சதவீதத்தை விளைவிப்பது குறிப்பிடத்தக்கது.பீஹாரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில், குடிநீரில் யுரேனியம் அளவு அதிகம் இருப்பதாக, 2022 ஆகஸ்டில் தெரியவந்தது. கர்நாடகாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிலை கண்டறியப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

நிலத்தடி நீரில் உள்ள யுரேனியம் அளவை குறைக்க இயற்கையான முறையை, பி.ஐ.டி., எனப்படும் பிலாய் தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானி பூணம் தேஷ்முக் கண்டுபிடித்துள்ளார். நெல்லிக்காய் மரப்பட்டைகளை பயன்படுத்தி குடிநீரில் உள்ள யுரேனியத்தை பிரித்தெடுக்க முடியும் என, அவரது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காப்புரிமை பெறப்பட்ட போதிலும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
அக் 23, 2024 14:16

பஞ்சாப் ஒரு மழை மறைவு பிரதேசம். ஆற்றில் நீர் வராத காலத்திலும் மூன்றாவது போக சாகுபடிக்காக ஆயிரம் அடி வரை போர் போட்டு (மின்சாரம் முற்றிலும் இலவசம்) நிலத்தடி நீரை உறிஞ்சி கோதுமையும் அரிசியும் பயிரிடுகிறார்கள். ஆழ்துளை நீரில் ஆபத்தான (யுரேனியம் போன்ற?) உலோக உப்புக்கள் அதிகளவில் இருப்பதால் தானியங்களின் தரம் கேள்விக்குறி. அரசும் வேறு வழியின்றி அவற்றைக் கொள்முதல் செய்கிறது. தரக்குறைவான தானியங்கள் மக்கிய பிறகு கிலோ ஒரு ரூபாய் விலையில் சாராய ஆலைகளுக்கு தள்ளிவிட்டு விடுகிறது. இதில் வீணானது நமது வரிப்பணமே.இதே மாநில விவசாய தரகர்கள்தான் இப்படிப்பட்ட( அவர்களே உண்ணத் தயங்கும்) தானியங்களுக்கு கூடுதல் விலை கேட்டு டெல்லி எல்லையில் ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்தினர். மேலும் ஆண்டுக்கு லட்சம் டன் வைக்கோலை எரித்து டெல்லியைச் சுற்றி புகைமாசையும் உருவாக்குகின்றனர். இதெல்லாம் கோர்ட் கண்களில் படுவதில்லை.


raja
அக் 23, 2024 08:07

இவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே இருக்கு என்ற பொது திருட்டு திராவிட திமுக கான்கிரஸ் கூட்டணி அரசு எதுக்கு ஆஸ்திரேலியா கிட்ட கெஞ்சுநானுவோ


பாமரன்
அக் 23, 2024 09:49

அக்காங் ராசுக்குட்டி... நம்ம கம்பெனி வந்துதான் அணு உலை பக்கத்திலேயே வேணுங்கிறப்ப வெட்டி வெட்டி எடுத்து உலையில் போடுறாங்களாம்... இத்தினி நாளா ரகசியமா இருந்துச்சா இப்போதான் தெரிஞ்சிடுச்சே... எல்லார்ட்டயும் சொல்வீராம்... குறிப்பா அம்மிணி அக்கா.. ச்சே டீம்கா நியூஸ் எல்லாத்திலும்... ஓகேவா...


raja
அக் 23, 2024 18:04

அக்கான்னா கணியக்காவா பாமரா... அவங்க கிட்ட கிடைத்தால் ஆட்டைய போட்ருவாங்கள்...


பாமரன்
அக் 23, 2024 07:17

காலங்காலமாக நாட்டுக்கு உணவு படியளக்கும் மாநிலங்களில்... அதுவும் கிணற்று தண்ணீரில் யுரேனியம் இருப்பதா சொல்வது ஏதோவொரு கேப்மாரி திட்டத்தின் தொடக்க புள்ளியாக இருக்குமோன்னு சந்தேகம் வருகிறது... ஆக கூடிய விரைவில் ஒரு மைனிங் ஒப்பந்தம் ப்ளஸ் போனஸாக யுரேனிய தாக்குதலில் இருந்து மக்களை காக்க கட்டாய நிலை அபகரிப்பு மற்றும் மக்களை காலி பண்ணும் ஒப்பந்தம் எட்டப்படலாம்...யார்கூடயா..??


Kasimani Baskaran
அக் 23, 2024 06:39

பாரதப்போரில் பயன்படுத்தப்பட்ட அணுவாயுதங்கள் செய்த கெடுதல்?


பாமரன்
அக் 23, 2024 07:20

காசிக்கு எப்பவும் தமாசு தான்..


Kasimani Baskaran
அக் 23, 2024 09:46

பெயருக்கு ஏற்ற கருத்து. U235 ஆயுதங்களிளில் உபயோகப்படுத்துவது பல லட்சம் வருடங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும். 700 மில்லியன் என்று நினைவு.


பாமரன்
அக் 23, 2024 10:33

ஒண்ணுமில்ல...


சமீபத்திய செய்தி