உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக வரி வருவாய்; மஹாராஷ்டிரா முதலிடம்; தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அதிக வரி வருவாய்; மஹாராஷ்டிரா முதலிடம்; தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேரடி வரி வருவாய் மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டில்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தை பிடித்துள்ளது. டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் இந்த டாப் 5 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்தை கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மூலதன நேரடி வரி வருவாயில் பின்தங்கியுள்ளன. வருமான வரியைப் பொறுத்தவரையில் கடந்த 2015ம் ஆண்டை காட்டிலும், 2024ல் 5.1 கோடி பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி வருவாயில் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 48 சதவீதம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, வருமான வரித்தாக்கல் செய்பவர்களில் 15% பெண்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 28, 2024 15:19

சி ஏ, என்ஜினீர்ஸ், டாக்டர்கள் போன்றோர் ஆன்லைன் பேமெண்ட் ஏற்பதில்லை .... மத்திய அரசு அதில் தோல்வியடைந்துவிட்டது என்றுதான் சொல்வேன் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 28, 2024 15:11

யாரு திவாலாகப்போறாங்க ன்னு கொயந்தைக்குக் கூட தெரியும் ன்னு நாலு நாள் முன்னாடி எனக்கு ஒரு டீம்காவின் கூலிப்படை அடிமை பதில் சொன்னதை அப்புறம்தான் பார்த்தேன் .... உ பி மாநிலம் தொழில்துறையில் முன்னேறிக்கிட்டு இருக்கு ..... மறுபக்கம் தமிழகம் தனது கடன்களை எப்படி யூசு பண்ணுது .... இதெல்லாம் ஒப்பிட்டுப்பார்க்கும் அளவுக்கு அந்த முரட்டு அடிமை கிட்டே விஷயம் இல்ல .. ஆசிட் உட்டு க்ளீன் பண்ணுன மாதிரி மேல்மாடி காலி ....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 28, 2024 15:08

ஜிடிபி, வாங்கிய கடன்.... debt-to-GDP ratio இது போல இன்னும் அனலைஸ் செய்ய பல அம்சங்கள் இருக்குதுங்க .... எல்லாத்தையும் வெச்சு ஒப்புநோக்கினா முன்னேறிய மாநிலம் ன்னு சொல்ற பத்தாம் பசலிகளின் ஐ மீன் முரசொலி அடிமைகளின் சாயம் வெளுத்துரும் ....


Ramesh Sargam
அக் 28, 2024 13:10

இந்திய மக்கள் தொகை 120 கோடிக்கும் மேல். ஆனால் 2025ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 120 கோடி எங்கே? 9 கோடி எங்கே? முறையாக வருமானவரி செலுத்துபவர்கள் செலுத்தினால், இந்தியாதான் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு. இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் நம்பர் 1 ஆக இருக்கும்.


Rpalnivelu
அக் 28, 2024 12:21

த்ரவிஷன்கள் இருக்கும் வரை தமிழகம் தேசிய அளவில் கீழேதான். எல்லாமே சுருட்டப் படுகிறது.


ஆரூர் ரங்
அக் 28, 2024 11:14

பெரும்பாலான முக்கிய கார்பரேட் நிறுவனங்களும் முக்கிய நிர்வாகிகளும் (அவர்களது ஆலைகளும் விற்பனையும் நாடு முழுவதும் இருந்தாலும்), ஐந்து பெரு நகரங்களில்தான் தலைமை அலுவலகம் வைத்து அங்குதான் ஜிஎஸ்டி, வருமானவரியும் கார்ப்பரேட் வரிகளையும் செலுத்துகின்றனர். அதனால்தான்.மிகச்சிறிய மாநிலமான டெல்லி கூட வரி வசூலில் டாப் ஐந்தில் உள்ளது. எனவே நம் மாநிலம் முன்னிலை வகிக்கிறது எனப் பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.


ஆரூர் ரங்
அக் 28, 2024 11:07

குஜராத் மாடல் திராவிஷ மாடலை முந்தியது. முன்பும் அப்படித்தான்.


கனோஜ் ஆங்ரே
அக் 28, 2024 11:26

செய்தியை முழுசா, ஒழுங்கா படிச்சீங்களா அய்யா அங்குசாமி... ////டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது.-//// இதுல எங்க குஜராத் தமிழ்நாட்டை முந்தியிக்கு...? உங்களுக்கு கணக்கு வாத்தியார் யாரு...? 4வது இடம் முதலா...? இல்ல... 5வது இடம் முதலா...? உனக்கு “எரிச்சல்” கண்ணை மறைக்குது..னு நினைக்குறேன்... “கேக்குறவன் கேணயன்னா, கேழ்வரகுல நெய் வடியுது”...ன்ன சொல்லுவியே...? சரியா படிங்கய்யா...? தமிழ்நாடு 4, குஜராத் 5. மத்தியில் ஆளுங்கட்சி ஆளுகின்ற குஜராத் 5வது இடம்... எதிர்க்கட்சியாகவும், முற்றிலும் மத்திய அரசால் புறக்கணிப்படும் தமிழ்நாடு 4வது இடம்...? இப்ப தெரியுதா... தமிழன்னா யாரு... திராவிடன்...னா யாரு...? “என்னைக்கு இருந்தாலும் சுக்கா ரொட்டி திங்குறவனுக்கும், அரிசி சோறு சாப்பிடுவறவனுக்கும் உண்டு...?


Mohamed Younus
அக் 28, 2024 10:53

வடக்கு வாழுது , தெற்கு தேயுது என்பதெல்லாம் கடந்த கால சொல்வடை . இப்போது தெற்கு தான் வடக்கையும் சேர்த்து வாழ வைத்து கொண்டு இருக்கிறது . வட மாநிலங்களில் புரை ஓடி போய் உள்ள மத தீவிரவாதம் இதற்கு ஒரு காரணம் ஆகும்.


Kumar Kumzi
அக் 28, 2024 12:27

பார்ரர்ரா


raja
அக் 28, 2024 10:26

இப்போ பாருங்க நம்ப இந்தியாவிலேயே நம்பர் ஒன்னு முதல்வர் இந்திய வரை படத்தில் மகாராஷ்டிரா வின் மேலே தமிழ்நாடு வரை படத்தின் ஸ்டிக்கர் ஒட்டி நம்பர் ஒன்னை தக்க வைபார்... மாடலா கொக்கா...


Indian
அக் 28, 2024 15:39

வெறியன்


முக்கிய வீடியோ