உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் ஹிந்து கோவில் சேதம்: பாதுகாப்பு அளிப்பது அரசின் பொறுப்பு; இந்தியா கடும் கண்டனம்

வங்கதேசத்தில் ஹிந்து கோவில் சேதம்: பாதுகாப்பு அளிப்பது அரசின் பொறுப்பு; இந்தியா கடும் கண்டனம்

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள துர்கா கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பது இடைக்கால அரசின் பொறுப்பு என இந்தியா வலியுறுத்தியுள்ளது.வங்கதேசம், டாக்காவில் துர்கா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஹிந்துக்களையும், அவர்களின் மதத் தலங்களையும் பாதுகாப்பது இடைக்கால அரசின் பொறுப்பு. சிறுபான்மையினரை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிக்கிறோம். கோவிலுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக, இடைக்கால அரசாங்கம், இன்று கோவிலை சேதப்படுத்த அனுமதித்தனர். இந்த கோவிலில் உள்ள சிலைகள் சேதமடைந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் வங்கதேசத்தில் தொடர்ந்து நடப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.டாக்காவில் உள்ள துர்கா கோவிலை ஜே.சி.பி., மூலம் சேதப்படுத்தும், வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஹிந்து கோவிலை சேதப்படுத்திய, சம்பவத்திற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Arjun
ஜூன் 27, 2025 14:20

இங்குள்ள செக்குரிலீஸம் பார்ட்டிகள் வாயை வாடகைக்கு விட்டுவிட்டார்கள்.


kumar
ஜூன் 26, 2025 23:26

operation Bengal


Ramesh Sargam
ஜூன் 26, 2025 22:50

அடுத்து ஆபரேஷன் சிந்தூர் பாகம் ரெண்டு வங்கதேசத்தின் மீது. ஒரு நா யி ன் வாலை துண்டித்துவிட்டோம். அடுத்த சொ றி நா யி ன் வாலையும் துண்டிக்கவேண்டும்.


Nada Rajan
ஜூன் 26, 2025 22:31

இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.. இணையத்தில் வீடியோவை பார்க்கும் போது மனது பதறுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை