உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவது கிடையாது: அசாம் முதல்வர்

ஹிந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவது கிடையாது: அசாம் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி: ‛‛ஹிந்துக்கள் வகுப்பு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது '' என அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., எம்.பி.,க்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு 47 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு 39 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரசுக்கு கிடைத்த ஓட்டுகள் மாநிலம் முழுவதும் கிடைக்கவில்லை. அக்கட்சிக்கு கிடைத்த ஓட்டுகளில் 50 சதவீதம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 21 தொகுதிகளில் இருந்து கிடைத்தது. சிறுபான்மையினர் அதிகம் வசித்த பகுதிகளில் பா.ஜ.,வுக்கு 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் மூலம், ஹிந்துக்கள் வகுப்பு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால், அதில் ஈடுபடுவது ஒரு மதத்தை சேர்ந்தவர்கள்; ஒரு சமுதாயத்தினர். வேறு எந்த மதத்தவரும் இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை.சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம், சாலை கிடையாது. ஆனால், அவர்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்து உள்ளனர். ஆனால், அதற்கு மாறாக அசாம் மக்கள், பழங்குடியினருக்காக அசாம் அரசு உழைத்தது. இச்சமூகத்தினர் 100 சதவீதம் பேர் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. கரீம்கன்ஜ் பகுதியைத் தவிர, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் 99 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஓட்டளித்து உள்ளனர். பிரதமர் மோடி அளித்த வீடு, மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் மூலம் பலனடைந்த சிறுபான்மையினர் காங்கிரசுக்கு ஓட்டளித்து உள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக காங்கிரசுக்கு ஓட்டளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAMAMOORTHY GOVI
ஜூன் 26, 2024 20:43

இந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவது கிடையாது,.இது முற்றிலும் உண்மை


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 00:00

இந்த செய்தியில் அவர் கூறியிருக்கும் அனைத்தும் முற்றிலும் உண்மை .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 00:00

இந்த செய்தியில் அவர் கூறியிருக்கும் அனைத்தும் முற்றிலும் உண்மை .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 23, 2024 23:58

காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சாதி, மத அடிப்படையில் அரசியல் செய்பவை ....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 23, 2024 23:56

முழு உண்மை ...... ஹிந்துக்கள் சமாதானமாக வாழவே விரும்புகிறார்கள் .... நாட்டைத் துண்டாட விரும்பி இனப்பெருக்கம் செய்பவர்கள் திருந்தவேண்டும் ....


pmsamy
ஜூன் 23, 2024 20:10

இந்துக்கள் என்று சொன்னாலே வகுப்பு வாதம் தான் இந்தியன் என்று பேசி பழகு


V RAMASWAMY
ஜூன் 23, 2024 19:10

சரியாக சொல்கிறார். தூண்டப்பட்டோ தூண்டப்படாமலோ அவர்கள் தான் இந்து சம்பந்தப்பட்ட வியாபாரங்களையோ, கடைகளிலிருந்து பொருட்களையோ வாங்கவேண்டாம், தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் மதக்காரர்களிடம் போதனை செய்கிறாற்போல் தெரிகிறது. இது உண்மையானால், இந்துக்களும் அதே மாதிரி செய்யவேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்குப் புரியும் யாருக்கு யாரால் நன்மை என்று.


venugopal s
ஜூன் 23, 2024 18:47

ஆமாம்,பாஜக ஆதரவு ஹிந்துக்கள் தவிர மற்ற ஹிந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவதில்லை.


என்றும் இந்தியன்
ஜூன் 23, 2024 18:06

1000% உண்மை இதை கேட்டவுடன் / படித்தவுடன் திருட்டு திராவிடம் கஸ்மால காங்கிரஸ் திருட்டு திரிணாமுல் காங்கிரஸ் வயிறு ஆசிடால் உறிஞ்சி வரிஞ்சி கட்டிக்கொண்டு உளறுமே பார்க்கணும். எல்லா பேப்பரிலும் முதல் பக்கத்தில் வருமாறு பார்த்துக்கொள்வார்கள் வருமே பார்க்கணும்.


Priyan Vadanad
ஜூன் 23, 2024 18:02

பொய்களை உரக்க சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். /இது வகுப்புவாதத்தையும், வெறுப்பையும், மதசகிப்பின்மையையும், பிரிவினையையும் வளர்க்கும் ஒரு குறிப்பிட்ட பாவ கட்சியின் தலைவர்களிடம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. /


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 19:58

முஸ்லிம் லீக்குக்கு முன் இங்கு மதவாத இயக்கங்கள் இருந்ததில்லை. பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான லீக் இப்போ திமுக வின் கூட்டணிக் கட்சிியில்லையா?. ஏன்? விடுதலைக்கு முன் தானே ஒரு கையில் தி.க கொடியுடன் இன்னொரு கையில் பாக் முஸ்லிம் லீக் கொடியையும் ஏந்தி ஊர்வலம் சென்றதாக கருணாநிதி கூறியுள்ளார். மதவாதத்தை தூண்டிவிட்டு பலனடைந்த கட்சிகள் திமுகவும் காங்கிரசும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ