உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு 3ஆக உயர்வு; பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்திலும் உறுதி

இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு 3ஆக உயர்வு; பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்திலும் உறுதி

பெங்களூரு: இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் இரு குழந்தைகளுக்கு உறுதியான நிலையில், குஜராத்தில் மற்றொரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d4y1yln6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நம் அண்டை நாடான சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவத் துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் பலர் முக கவசம் அணிந்து காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது.இந்த வைரஸ் குறித்து நம் நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் இயக்குனர் அதுல் கோயல் கூறுகையில், ''சளி போன்ற அறிகுறிகளே இதனால் இருக்கும். வயதானவர்கள், குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் கவலையடையும் அளவுக்கு இது தீவிரமான விஷயமில்லை,'' என்றார்.இந்நிலையில், இன்று (ஜன.,06) இந்தியாவில் முதல் சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு முதலில் வைரஸ் தொற்று இன்று ஜன.,6ம் தேதி காலை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்றொரு 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. 'பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.'கோவிட் - 19' எனப்படும் கொரோனா தொற்று பரவல், 2019 இறுதியில் சீனாவில் துவங்கி, அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. அந்த பாதிப்பினால் வீழ்ந்த சர்வதேச பொருளாதாரம், இப்போது தான் மெல்ல சுதாரித்து எழத் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2025 12:24

தேசபக்தி... எதிரி நாடு சீனா... அப்படீன்னு பெருமையா உளறுகிறவர்கள்தான் மொதல்ல, சீனாவுக்கு “பஞ்சம்” பொழைக்க ஓடுறானுங்க? “என்ன வளம் இல்லை நம்நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”...னு வாலி பாடிய வரிகளை எவனும் காதுல வாங்காம... காசு, பணம், துட்டு, மணி, மணி..ன்னு காசுக்காக நம் நாட்டின் எதிரி நாடான சீனா வளர்ச்சி பெறுவதற்கு, தன் உழைப்பை செலுத்த “கொடுத்த காசுக்கு மேலே கூவுறாண்டா கொய்யால”... என்பதைப் போல, அங்கே போய் அடிமை உத்யோகம் பார்க்குறவனங்க.. அங்க உருவாகிற நோயோட இங்க வந்து நம் நாட்டில் பரவ விடுறானுங்க... இவனுங்கதான் தேசபக்தி...ன்னு கூவுறானுங்க... பணத்துக்காக மானங்கெட்ட ஈத்தலை வேலைகூட செய்வானுங்க..,


V வைகுண்டேஈஸ்வரன், chennai
ஜன 06, 2025 13:06

இதுல என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...கேவலம் 200 ரூவா ஊ ஃபீஸ்


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 14:47

உங்களுக்கு திமுக மேல் என்ன கோபம் ?? சீனக்கொடியை இஸ்ரோ அழைப்பிதழில் வெளியிட்டு விசுவாசம் காட்டிய திமுகவை அவமதிப்பது ஏன் ??


Ramesh Sargam
ஜன 06, 2025 11:42

வைரஸ் சீனாவிலிருந்து எப்படி பெங்களூருக்கு வந்தது? அந்த குழந்தை சீனாவிலிருந்து, பெங்களூருக்கு பயணம் செய்ததா? அந்த குழந்தையுடன் பயணம் செய்தவர்கள் யார் யார்? அவர்களையும் தனிமைப்படுத்தவேண்டும்.


முக்கிய வீடியோ