உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமனாக வந்த காரால் கொடூர விபத்து: 7 பேர் பலி - வீடியோ வைரல்

எமனாக வந்த காரால் கொடூர விபத்து: 7 பேர் பலி - வீடியோ வைரல்

புவனேஸ்வரம்: ஒடிசாவில் அசுர வேகத்தில் வந்த கார் இரு பைக், ஷேர் ஆட்டோ மீது மோதிய கொடூர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் பிஜப்பூர் என்ற கிராமத்தில் குறுகலான கிராம சாலை உள்ளது. இன்று அசுர வேகத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவை இடித்துவிட்டு சென்றதில் ஷேர் ஆட்டோ தலைகுப்புற கவிழந்தது, எதிரே இரு பைக்குகளில் வந்தவர்களையும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் 15-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது சம்பவ இடத்தில் நான்கு பேர் பலியாயினர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 3 பேர் பலியாயினர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது. விபத்தின் வீடியோ காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி