உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிமக்கள் நலன் போற்றும் கர்நாடகா: நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி

குடிமக்கள் நலன் போற்றும் கர்நாடகா: நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கிளப்புகள், பார்கள் திறந்திருக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

ஹைடெக் நகரமான பெங்களூருவில் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால் எந்நேரமும் சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை காணலாம்.

நள்ளிரவு 1 மணி

இந் நிலையில், மாநில அரசின் வருவாயை மேலும் அதிகரிக்க, பெங்களூருவில் உரிமம் பெற்ற பார்கள், கிளப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவும் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடிதம்

முன்னதாக, பப்கள், ரெஸ்டாரென்ட்களை அதிகாலை 2 மணி வரை திறந்து வைக்க அனுமதி கோரி ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

skv srinivasankrishnaveni
ஆக 08, 2024 09:02

அடப்பாவிகளா நாசமாப்போக குடிச்சுக் குடிச்சு எத்தால்தான் மக்கள் தொகை குறைய இதுதான் பெஸ்ட் வழியா வெட்கமாஇல்லீயா அடுத்து எந்த கண்ராவிகளால் நாடு சீரழியுமோ


Easwar Kamal
ஆக 07, 2024 17:30

உடனே தமிழகத்துல அதை கரணம் கட்டி 24 மணி நேரம் திறக்க படும்னு சொல்லுற போரானுவ. கர்நாடகவிலாவது கொஞ்சம் நல்ல சரக்கு கிடாய்க்கும் இங்கே டூப்ளிகேட் கொடுத்து குடிகாரங்களை gali பன்னிருவனுவளே.


vijai
ஆக 07, 2024 17:09

முதல்ல நம்ம தமிழ்நாட்டோட கதியை பாருங்க


Narayanan
ஆக 07, 2024 16:37

24/7 சேவை என்று அறிவித்துவிடலாமே . இருபத்திநாலுமணிநேரமும் இயங்க அனுமதித்து விட்டால் தீர்ந்தது பிரச்சனை . தமிழ்நாட்டில் இருக்கும் "குடி" அரசும் அறிவிக்கலாம் . நல்ல வருமானம் அரசுக்கும் போலீசுக்கும் கிடைக்கும் . போங்கடா நீங்களும் உங்கள் அரசம் .


பச்சையப்பன கோபால் புரம்
ஆக 07, 2024 14:23

செம! கடந்து 10 வருட ஆட்சியில்பொருளாதார ரீதியாக சீரழிந்து போன மரத்த தமிழகத்தை தூக்கி நிறுத்த எங்கள் தங்க தளபதி வைத்திருந்த ஜடியா!


Balasubramanian
ஆக 07, 2024 12:24

கர்நாடகாவில் தண்ணீர் மடை திறந்து விட்டால் தமிழ் நாட்டிற்கு வர எவ்வளவு நாள் ஆகும்! இனி இரவு பகலாக ஆட்டம் தான்


skv srinivasankrishnaveni
ஆக 08, 2024 09:03

தானாவே அணைகள் நிரம்பியம் வச்சுக்க துப்பேயில்லாத டாஸ்மாக் ஆட்சியேதான் நடக்குது மக்களுக்கு சோறுவேண்டவே வேண்டாம் சாரயம் போதும் என்ற பரந்த மனசு


Ramesh Sargam
ஆக 07, 2024 11:46

இப்பொழுது மட்டும் என்ன நள்ளிரவு ஒரு மணி வரை திறக்கப்படவில்லையா? அரசை ஏமாற்ற, போலீசை ஏமாற்ற பதினோரு மணிக்கு முன்வாசலை மூடிவிட்டு, பின் வாசல் வழியாக இருபத்தி நான்கு மணிநேரமும் ஜோராக வியாபாரம் செய்கிறார்கள் பப் உரிமையாளர்கள்.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:07

தற்போதைய ஓனருக்கே பாரில் பணியாற்றிய அனுபவமுண்டு.


பாமரன்
ஆக 07, 2024 11:02

பூலோக சொர்க்கம் உபி, டில்லி, ஹரியானா போன்ற மாநிலங்களை போல விடியும் வரை பார்களையும் குஜாலான டான்ஸ் டிஸ்கோகளையும் திறந்து வைத்து மக்கள் நலன் காக்காத கர்நாடக அரசையும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ திமுகவையும் கண்டிக்கறோம் மை லார்ட்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ