உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி: பார்லி விவாதத்தில் காங்கிரஸ் கேள்வி

பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி: பார்லி விவாதத்தில் காங்கிரஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறைய விளக்கம் கொடுத்தார். ஆனால் பயங்கரவாதிகள், பஹல்காமில் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை அவர் சொல்லவில்லை,'' என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது பாகிஸ்தானில் 9 முக்கிய நிலைகளில் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்தியா, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து விட்ட நிலையில், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதை அடுத்து போர் முடிவுக்கு வந்தது என்று ராஜ்நாத்சிங் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசியதாவது:ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிறைய விளக்கம் அளித்தார். ஆனால் பயங்கரவாதிகள் பஹல்காமை எவ்வாறு அடைந்தார்கள் என்பதைச் சொல்லவில்லை.இது தகவல் போரின் யுகம். பாதுகாப்பில் தோல்வி மூலம் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பின்னால் ஒளிந்து கொள்ள கூடாது. மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, தவறான தகவல்களைப் பரப்ப, சில சக்திகள் வேலை செய்கின்றன.பஹல்காம் தாக்குதல் நடந்த நேரத்தில் தனது சவுதி அரேபியா பயணத்தை முடித்த பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனடியாகச் செல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் அரசியல் தொடர்பாக உரையாற்றினார்.பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் மட்டுமே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்.இவ்வாறு கவுரவ் கோகாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

பேசும் தமிழன்
ஜூலை 29, 2025 13:18

தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால்.... எல்லாம் கான் கிராஸ் கட்சி இருக்கும் தைரியத்தில் தான்... அவர்களின் ஆதரவாளர்கள் தானே நீங்கள்.


vbs manian
ஜூலை 29, 2025 10:10

மும்பையில் அத்துமீறியது எப்படி.


Raj
ஜூலை 29, 2025 09:16

கான்கிரஸ் இருக்கும் தைரியத்தில் தான்


Kasimani Baskaran
ஜூலை 29, 2025 04:06

எதிரிக்கட்சியினர்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுப்பது மகா மட்டமான அணுகுமுறை.


Lakshmanan
ஜூலை 28, 2025 23:17

காங் ஆட்சியில் கந்தகார் விமான கடத்தல்? மசூத் அசார் விடுவிப்பு ?? மும்பை அட்டாக்?


ரங்ஸ்
ஜூலை 28, 2025 21:23

கருத்துக்கள் பதிவு செய்த பிறகு அதனை ஆராய்ந்து வெளியிட நிறைய நேரம் ஆகிறது. விரைவில் வெளியிட தினமலரை கேட்டுக் கொள்கிறேன்.


Ramesh Sargam
ஜூலை 28, 2025 21:11

பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி? அதானே, அவர்கள் உங்கள் ஆதரவில், அதாவது தேசதுரோக காங்கிரஸ் கட்சியினரின் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்போது எப்படி அத்துமீறினார்கள்? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.


ரங்ஸ்
ஜூலை 28, 2025 21:05

தற்போதய செய்தி. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். காஷ்மீரில் பெரும்பான்மை சமூகத்தில் யார் நம் நாட்டை நேசிப்பவன், யார் துரோகி என கண்டுபிடிப்பதே கஷ்டம்.அப்துல்லா, முப்டி உட்பட பெரும்பாலும் பாகிஸ்தான் ஆதரவு நிலை. மக்கள் வாழ்க்கை மேம்பட தொழில், சுற்றுலா துறைகள், குகைச்சாலைகள் எவ்வளவோ முன்னேற்ற திட்டங்கள் செய்தாலும் சிலர் நன்றி மறந்து தீவிரவாதத்தை ஆதரிக்கின்றனர்.


தமிழ்வேள்
ஜூலை 28, 2025 20:13

காங்கிரஸ், பப்பு வகையறாக்களுக்கு தெரியாமல், காங்கிரஸ் தேச துரோக கும்பல் அனுமதி இன்றி பயங்கரவாத கும்பல் பாரதத்தில் எந்த ஒரு தாக்குதல் நாசவேலை குண்டு வெடிப்பு & ஹிந்து ஜனங்களை தாக்கும் நடவடிக்கைகளை செய்யும் வழக்கம் இதுவரை இல்லை.. அப்புறம் எதற்கு இந்த வெத்து சவடால் டிராமா எல்லாம்?


MARUTHU PANDIAR
ஜூலை 28, 2025 20:02

இதுக்கு போய் மக்கள் வரிப்பணத்தில் நாடாளுமன்ற விவாதமா? இது அடுக்குமா? ஏண்டா உங்க ஆட்சியில சகட்டு மேனிக்கு உள்ள புகுந்து கொல்லோ கொல்லு என்று கொன்னு தீர்த்தாங்களே? அதுக்கு ஒங்க மண்ணு சிங்கு கண்டனம் தான தெரிவிக்க முடிஞ்சுது? தற்போது பயங்கரவாதம் புரிந்த உங்க நட்பு நாட சின்ன பின்னம் செஞ்சாச்சே, அதோடு நிறுத்த வேண்டியது தானே? கையாலாகாத கோஷ்டி ஆளு என்ன கேள்வி எல்லாம் கேக்கறான் பாரு. இதுக்கெல்லாம் நாடாளுமன்ற விவாதமாம். வேலையத்த வெ .....