உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலை ஒழிப்பது எப்படி: டாடா சொன்ன பதில் இதுதான்!

ஊழலை ஒழிப்பது எப்படி: டாடா சொன்ன பதில் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஒவ்வொரு நாளும், நான் லஞ்ச ஊழல் செய்யவில்லை என்ற நிம்மதியோடுதான் இரவு படுக்கைக்கு செல்ல விரும்புகிறேன்,'' என்பதே ஊழலுக்கு எதிரான ரத்தன் டாடாவின் நிலைப்பாடாக இருந்துள்ளது.மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, லஞ்ச ஊழலுக்கு எதிரானவர். அவர் 2010ல் அளித்த ஒரு நேர்காணலில் லஞ்ச ஊழல் பற்றி இன்னொரு தொழிலதிபருடன் நடந்த உரையாடல் பற்றி குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த தொழிலதிபர், 'வியாபார ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் ஒருவருக்கு நீ்ங்கள் 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால் போதும்' என்று ஆலோசனை கூறியள்ளார்.அதற்கு டாடா மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த தொழிலதிபர், 'இப்போதுள்ள நடைமுறையில் லஞ்சத்தை நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்' என்று கேட்டுள்ளார்.அதற்கு டாடா, 'அதெல்லாம் சுய ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தால் போதும்; லஞ்சத்தை தவிர்த்து நிறுவனங்களை நடத்த முடியும். அவையெல்லாம் லஞ்சம் கொடுத்துப் பழகி விட்ட உங்களுக்குப்புரியாது' என்று கூறியுள்ளார்.ஒவ்வொரு இரவும், 'நான் லஞ்ச ஊழல் என்னும் தவறை செய்ய வில்லை என்ற நிம்மதியோடு தான் படுக்கைக்கு செல்ல விரும்புகிறேன்' என்று டாடா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankar
அக் 11, 2024 13:08

நீரா ராடியாவிடம் கேட்டால் - ஊழலை எப்படி ஒழிப்பது என்பதை அலைக்கற்றை நாயகன் & நாயகியை கேட்டு சொல்வார்


thala rasigandaa
அக் 11, 2024 13:58

Crt


Subash BV
அக் 11, 2024 12:32

Maybe ok for him because he was a billionaire. If he complains the higher up will intervene and will solve. BUT NOT FOR THE COMMON MAN. HE HAS TO BRIBE IF JOBS HAVE TO BE DONE EARLY, CANT WAIT FOR THE SWEET TIME OF OFFICIALS. IT MAYBE DAYS, YEARS OR DECADES, EVEN CENTURIES. A CONTEST ON ARTICLE 25 IN 2012 BY A HINDU ACTIVIST IS STILL PENDING IN THE APEX. THINK SERIOUSLY. UNLESS OUR POLITICIANS THE BASE, CORRECT THEMSELVES, THIS NONSENSE WILL CONTINUE TO EXIST. ONLY SOLUTION. BE A STUBBORN PATRIOT 24/7.


R. THIAGARAJAN
அக் 10, 2024 19:35

Corrupted officials and their team keeping target maximum from corporate industries Infact they are all forcing with their undue advantages thro their periodic audits and licences renewal and festival demands etc., Better an dedicating vigilance team monitoring them on 24 x 7 basic to be reduced corruptions stage by stage.


santhanam
அக் 10, 2024 16:27

அப்போ புரியலை .....ஈப்போ புரியுது.....


ஆரூர் ரங்
அக் 10, 2024 16:15

மிகப்பெரிய கார்பரேட்கள் லஞ்சம் கொடுப்பதில்லை. ஆனால் சப் காண்ட்ராக்ட் ஆட்கள் கொடுத்துவிடுகிறார்கள்.


Priyan
அக் 12, 2024 12:22

இது முழுக்க முழுக்க தவறான தகவல். இந்தியாவை பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் திட்ட மதிப்பீட்டிலேயே வங்கிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் அவர்கள் கடனுக்கு ஆன மதிப்பை அதிகப்படுத்தி கொள்கிறார்கள். அவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் அவர்களிடம் இருந்த குறைந்த அளவிலான தொகையை தான் வங்கிகள் கையக படுத்துகிறார்கள். தற்போதைய ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இது வரை இருபத்தைந்து லட்ச கோடிக்கு கடனை தள்ளுபடி செய்து விட்டு அந்த நிறுவனங்களில் இருந்து திரும்ப பெற்றது வெறும் இரண்டரை லட்ச கோடிக்கும் குறைவு. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வெறும் பத்து சதவீதம் பணம் தான் வங்கிகளுக்கு திரும்ப கிடைத்துள்ளது. இதற்கான முதல் காரணமே திட்ட மதிப்பிற்கு அதிகமான கடனை பெரிய நிறுவனங்கள் பெற்றது தான். உங்களுக்கு சிறிய அளவில் நடக்கும் லஞ்சத்தை பற்றி தான் தெரியும். ஆனால் பெரிய நிறுவனங்கள் வங்கி கடன் வாங்கி ஏப்பம் விடுவதை பற்றி எல்லாம் எந்த புரிதலும் இல்லை.


Iraivi
அக் 10, 2024 15:45

மனிதாபிமானம் மிகுந்த ஒரு நிர்வாகி. டாடா நிர்வாகத்தில் தொழிலாளர்கள் நலனுக்கு என்றுமே முன்னுரிமை. ஒரு தொழிலாளி சட்டத்துக்கு புறம்பாக, நிர்வாகத்துக்கு எதிராக அதன் மாண்பை குறைக்கும் வகையில் செயல் பட்டாலே ஒழிய எந்த ஒரு தொழிலாளியையும் வேலை நீக்கம் செய்ய மாட்டார்கள். அதிக பட்சமாக நாட்டின் வேறு மூலையில் இருக்கும் ஒரு கிளைக்கு இட மாறுதல் செய்வர். நாட்டில் முதல் முறையாக, டாடா நிர்வாகத்தில்தான் ஆண்டின் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட லாபத்தை விட, அதாவது பட்ஜட்டெட் பிராபிட், அதிக லாபம் ஈட்டும் வருடங்களில் ஐம்பது சத அதிக லாபத்தை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் முறையை கொண்டு வந்தவர். மீதம் ஐம்பது சத லாபம் முதலீட்டாளர்களுக்கும் நிர்வாகத்திற்கு மூலதன மறு சுழற்சிக்கும் செல்லும். அது போலவே, வணிக வரி துறை போன்ற அரசு துறைகளுடன் நேரடி சட்ட சிக்கல் எழும்போது, வழக்கமாக பெரும்பாலானோர் செய்யும் கையூட்டு கொடுத்து வேலையை முடிப்பதை அனுமதிக்க மாட்டார்கள். சட்டபூர்வமாக பத்து இருபது மடங்கு முன்பணம் செலுத்த வேண்டி இருந்தால் கூட, அதனை செலுத்தி முறையான ரசீது பெற அறிவுறுத்துவார்கள். பின்னர் அந்த பிரச்சனையை சட்ட பூர்வமாக எதிர்கொண்டு செலுத்திய தொகையை திரும்ப பெறுவார்கள். யாராவது ஒரு தொழிலாளி தன்னிச்சையாக கையூட்டு கொடுத்து பிரச்சினையை முடித்தது தெரிந்தால் அவன் வேலையை இழக்க நேரிடும். டாடா டிரஸ்ட் மூலம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல சமூக சேவைகளை செய்தவர். இன்றைக்கு இருக்கும் பணம், லாபம் மட்டுமே குறியாக கொண்ட பல தொழிலதிபர்களிடையே நாட்டு நலனையும் மக்கள் நலனையுமே குறிக்கோளாக கொண்டவர். எல்லாம் வல்ல இறைவன் அவரை தன்னுடனே வைத்துக் கொள்ளாமல் மீண்டும் இந்தியாவிற்கு வழங்க வேண்டுகிறேன்.


Mohan
அக் 10, 2024 15:36

தமிழ் நாட்டில் திரு.கருணாநிதியும், மத்தியில் திருமதி. இந்திரா காந்தியும் ஆரம்பித்து வைத்த இந்த ஊழல் விவகாரங்கள் நாட்டையே அழிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. ஊழல் இல்லாது நாடு இருக்க முடியாது எனும் நிலைக்கு வந்துள்ளது ஜனங்கள் அதை எதிர்க்க முயன்றால் திமுக ஆதரவு அரசு அதிகாரிகள் மிரட்டுவதில் நம்மை கதிகலங்க வைத்து விடுவார்கள். இந்த அதிகாரிகள் தங்களுக்கு எஜமானர்களாக திமுக தலைவர்களை வைத்துக் கொண்டுள்ளனர். இந்த அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போகும் லஞ்சப்பணம், பெண்களை ஏற்பாடு செய்பவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு சமம் என அவர்கள் முகத்தில் சொல்ல முடியாத ஆண்மையற்றவர்களாக பொது ஜனங்கள் இருக்கிறோம்.


N Annamalai
அக் 10, 2024 15:27

வெள்ளத்தனைய மலர் நீட்டம் .மேன் மக்கள் மேன் மக்களே


Lion Drsekar
அக் 10, 2024 15:25

இவரே வருத்தப்பட்டு அல்ப்பத்துக்கு போவுஷு வந்தால் , அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் என்பது போல் இவருக்கே சூரிய கிரகணம் பிடித்தது, பிறகு பெரிய மனதுடன் விட்டுவிட்டர் , அதே போன்று 60 ஆண்டுகள் முன்னப்பு மிகவும் எல்லோராலும் இரும்பிப்படிக்கும் ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி, நம் ஊர் தமிழர் , யார் என்று தெரிந்திருக்கும், அதுவும் அந்த காலங்களில், அந்த நபர் பணிபுரியும் அலுவலகத்தில் மேலதிகாரிகள் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் எடுபிடிகள் தினமும் லஞ்சம் வாங்குவதைக்கண்டு வருத்தப்பட்டு நேரில் முதலாளியிடம் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார், ஒருநாள் டாட்டா அவர்கள் வீட்டுக்குச் செல்ல அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது, நம்மவர் ஓடிச்சென்று அவரது காலில் வீழ்ந்து அங்குநடக்கும் சமபவத்தை கூற அவர் எதுவுமே கூறாமல் சென்றுவிட்டார், மறுநாள் இவரை தனது அறைக்கு அழைத்திருக்கிறிறார் , விபரத்தைக்கேட்டு , இங்கே பார் நான் இவ்வளவு பணம் முதல் போட்டிருக்கிறேன் எனக்கு இவ்வளவு , அதற்க்கு மேலே வருகிறது ஆகவே எனக்கு மற்றவைப்பற்றிய கவலை இல்லை, அவர்கள் சிறிய பெட்டிகளில் எடுத்துச் செல்கிறார்கள் என்று கூறுகிறீர்கள், நீங்கள் முடிந்தால் பெரிய பெட்டியில் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியிருந்த செய்தி மிகவும் பிரபபலமாக வெளிவந்தது, ஆக எலும்புத்துண்டுகள் , எல்லாமே அறிந்தவர், இருந்தும் அவரது அறிவுரை நீ போட்ட பணத்துக்கு வருமானம் வருகிறதா என்பதுதான் இதுதான் வியாபரம் , வந்தே மாதரம்


R Dhasarathan
அக் 10, 2024 14:19

முடிந்தவரை நான் கொடுப்பதில்லை, சிலர் எங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள்


புதிய வீடியோ