உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபிஸ் பாதிப்பை கோவா கட்டுப்படுத்தியது எப்படி?

ரேபிஸ் பாதிப்பை கோவா கட்டுப்படுத்தியது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: கடந்த 2021ம் ஆண்டு முதல் கோவா ரேபிஸ் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக ரேபிஸ் தொற்று காரணமாக ஒரு உயிரிழப்பு கூட நேரிடவில்லை என்பதும் ஆச்சர்யமான விஷயம்.இந்தியா முழுவதும் தெருநாய்கள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்று காரணமாக உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து ஏற்படுகின்றன. இது பற்றிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டில்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அனைத்து தெருநாய்களையும் காப்பகத்தில் அடைப்பது சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.இந்த சூழலில், கடந்த செப்டம்பர் 2017ம் ஆண்டு முதல் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் கோவா மாநிலம் ஒழித்துள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக ரேபிஸ் தொற்று காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதனால் கடந்த 2021ம் ஆண்டு கோவா ரேபிஸ் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு உயிரிழப்பு காரணமாக இந்த சாதனை தகர்ந்து போனது. பின்னர் 2024ம் ஆண்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த ஆண்டும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எப்படி சாத்தியம்கடந்த 2014ம் ஆண்டு கோவா மாநிலத்தில் தெருநாய்க்கடியால் ரேபிஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 17 பேர் பலியாகி விட்டனர். மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டபோது மாநில அரசு விழித்துக்கொண்டது. மிஷன் ரேபிஸ் என்ற தொண்டு நிறுவனம், தடுப்பூசி போடும் பணியை துவக்கியது.30 நாட்களில் 50 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்காக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கால்நடை டாக்டர்கள் மற்றும் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 63,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அதற்கு அடுத்தாண்டு, முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், மிஷன் ரேபிஸ் உடன் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 24 மணி நேர ஹாட்லைன், கண்காணிப்பு, தடுப்பூசி போடும் திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. இதன் பயனாகவே 2017 ம் ஆண்டு முதல் கோவா மாநிலத்தில் தெருநாய்க்கடி, ரேபிஸ் பிரச்னை காணாமல் போனது என்கின்றனர் நிபுணர்கள்.இன்று வரை கோவா மாநிலத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது. ''ஒரு தெருநாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்ய தவறினால் எட்டு அல்லது ஒன்பது நாய்க்குட்டிகள் இனப்பெருக்கம் செய்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்'' என மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் நீலகாந்த் ஹர்லங்கார் தெரிவித்தார்.கடந்த 5 ஆண்டுகளில் கோவாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை:2020-21ம் ஆண்டு - 2,2652021-22ம் ஆண்டு- 2,1172022-23-ம் ஆண்டு- 10,8502023-24ம் ஆண்டு- 127302024-25ம் ஆண்டு-12,089


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சண்முகம்
ஆக 16, 2025 22:15

பெரிய டெண்டர் போட வாய்ப்பு. விட்டுடாதீங்க.


Svs Yaadum oore
ஆக 16, 2025 17:13

கோவா சுண்டக்காய் மாநிலம் ....விடியல் திராவிடனுங்க ஆளும் தமிழ் நாடு இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் தமிழ் நாடு ... பட்டறிவு பகுத்தறிவு படிப்பறிவு என்று முன்னேறிய மாநிலம் தமிழ் நாடு ....இதை விடியல் திராவிடனுங்க சவாலாக ஏற்றுக்கொண்டு ரேபிஸ் இல்லாத ராமசாமி மண் இது என்று நிரூபித்து காண்பிப்பார்கள் ....ராமசாமி மண் ஒன்றும் வடக்கன் பானிபூரி மாநிலம் கிடையாது ....திராவிடனுங்களுக்கு தன் மானம் ரொம்ப அதிகம் ...இதை சும்மா விட்டுவிட மாட்டார்கள் ..


Mohan Kumara Raja
ஆக 16, 2025 15:40

வாழ்த்துக்கள்


Rathna
ஆக 16, 2025 12:34

கோவா பிஜேபி ஆளும் மாநிலம். 15 க்கும் மேல் பிஜேபி ஆளும் மாநிலங்கள். இதை கட்டாயப்படுத்த பிரதமர் உத்தரவு போட வேண்டியது தானே?


Ramanathan Srinivasan
ஆக 16, 2025 12:14

தமிழ் நாட்டிலும், வேறு பல மாநிலங்களிலும் கூட நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாகவும், கருத்தடை செய்ததாகவும் கணக்கு காட்டி பணத்தை எடுத்துக்கொள்வார்கள் , ஆனால் கணக்கு காட்டிய அளவு செய்வதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும், அமுதசுரபி போல பணம் எடுக்கலாம். உண்மையில் அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை செய்தால், சில வருடங்களில் தெரு நாய்கள் குறைந்துவிடும். ரேபிஸ் தொற்றும் பரவாது. முயன்றால் முடியும் என்பதற்கு கோவா ஒரு முன் உதாரணம்.


Jack
ஆக 16, 2025 12:55

தெருநாய்கள் நேரந்தோறும் உணவு கிடைக்காமல் அரைபட்டினியில் கார்களிலும் ட்ரக்குகளிலும் சிக்கி உயிரிழக்கின்றன ..இறந்த மிருகங்கள் பறவைகள் கெட்டுப்போன உணவுகளை உண்டு நோய்வாய்ப்படுகின்றன ..கருணை கொலை தான் சரியான தீர்வு ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை