உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷாரூக்கான் தேர்வு எப்படி... என்ன அளவுகோல்... : தேசிய விருது தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி

ஷாரூக்கான் தேர்வு எப்படி... என்ன அளவுகோல்... : தேசிய விருது தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி

71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளை வென்றது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் சிறந்த நடிகராகவும், ராணி முகர்ஜி சிறந்த நடிகையாகவும், எம்.எஸ் பாஸ்கர், விஜயராகவன் சிறந்த துணை நடிகராகவும் தேர்வாகினர். இதேப்போல் பல மொழிகளிலும் உள்ள படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன. ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அதில் சர்ச்சைகள் எழும். இந்த படத்தை விட அந்த படத்திற்கு கொடுத்திருக்கலாம், அந்த நடிகர், நடிகைக்கு வழங்கியிருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழும். இந்தமுறை நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் இவருக்கு இந்தாண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ‛உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வசி கூறுகையில், ‛‛எனக்கு விருது அறிவித்த தேர்வு குழுவிற்கு நன்றி. எதன் அடிப்படையில் ஷாரூக்கான் சிறந்த நடிகர் என தேர்வு செய்தீர்கள். இதற்கான அளவுகோல் என்ன. சிறந்த நடிகரான விஜய ராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது ஏன். பூக்காலம் படத்திற்காக அவர் பல மணிநேரம் மேக்-அப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார். தமிழில் நான் நடித்த ஜே.பேபி படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம், வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mecca Shivan
ஆக 05, 2025 12:31

இது கேரளா அரசியல் ..ஊர்வசிக்கு கம்மிகள் கொடுக்கும் அழுத்தம் ..சுரேஷ் கோபியை மாட்டிவிடும் திட்டம்


Gopi Ramesh
ஆக 05, 2025 11:45

ஏனெனில் அவர் இந்து மதத்தைத் தழுவுகிறார்


Rajan A
ஆக 04, 2025 21:57

இதெல்லாம் அரசியிலில் சாதாரணமப்பா. விருததை விலைக்கு வாங்கி பிழைப்பவர் பற்றி எல்லோருக்கும் தெரியும்


K.n. Dhasarathan
ஆக 04, 2025 21:09

தேசிய விருது குழு ஒரு பாராபற்றமற்ற ஒரு அமைப்பு என்று எண்ணி இருந்தோம், அதன் தற்போதைய நிலை மிக கேவலமாக உள்ளது, யாருக்காவது பணிந்து, மிரட்டலுக்கோ தேர்வுகளை செய்கிறதா ? ஷாரூக்கான் தேர்வு எப்படி, ஏன் ? அப்புறம் ராணி முகர்ஜி இன்னும் பழைய நட்சத்திரங்கள், தேர்வு சரியில்லை, தமிழில் " வாத்தி " உள்பட பல படங்கள் அருமையாக வந்துள்ளன, இதை விடுத்து " பார்க்கிங் " பட தேர்வு மிகுந்த நகைச்சுவை தருகிறது. என்ன அளவுகோல் பயன்படுத்தினார்கள் ? அல்லது இன்னொன்று செய்வோம், குழுவையே களைத்து புதிதாக அமைக்கலாம்.


raju
ஆக 04, 2025 20:58

முதலில் இந்த கூத்தாடிகளுக்கு விருதுகள் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன. செவிலியர்கள், சாக்கடை தூர் வாருபவர்கள், காவலாளிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள், தீயணைப்பு வீரர்கள் என்று கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் என்று விருதுகளை எதிர்பாராமல் இரவு பகலாக உழைக்கிறார்கள். அவர்களை விடவா இந்த கூத்தாடிகள் உயர்ந்தவர்கள்?


Ragupathy
ஆக 04, 2025 20:32

நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எந்த ஒரு விருதும் கிடையாது... சினிமாக்காரர்களுக்கு விருது தருவதை நிறுத்த வேண்டும்...


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 04, 2025 20:15

எம்ஜியாருக்கு “ரிக்‌ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. அதைல்லாம் பெருமையா? கொடுமை


ஆரூர் ரங்
ஆக 04, 2025 19:51

எல்லா விருதுகளையும் அவ்வளவாக பிரபலமாகாத நபர்களுக்கு அளித்தால் பிற்காலத்தில் விருதுப் பட்டியல்களை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள். இனிமேல் இந்த விருதுகள் தருவதை அரசு நிறுத்திவிடலாம். வருடா வருடம் அரசியல்தான் நடக்கும். கெட்டபெயர்தான் மிஞ்சும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 04, 2025 20:20

ஜால்ராவுக்கு, முட்டுக் கொடுப்பதற்கு தனி விருது வழங்கலாம். ரெண்டையுமே இவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்


vivek
ஆக 05, 2025 06:19

சாரி, அதை உன்னை போல வாழ்நாள் கொத்தடிமை ஏற்கனவே வாங்கி விட்டார்.... அடுத்த முறை உனக்கு தான் பொய் இந்து


நசி
ஆக 04, 2025 19:37

ஜனரஞ்சகம்என்டர்டெயின்மென்ட்க்கு கொடுப்பதுதான் சினிமா விருது..அரேபியா ஓட்டகம்‌ மேய்பவர் கதையால் சோகம்தான் அதுதான் தினம் தினம் பார்காகிறோமே. ₹1000 கோடி முதலீட்டில் ஓருவர் தொழிற்சாலை அமைத்து நிபுனர்களை வைத்து வேலை வாங்கி வரி செலுத்தி வருஷ முடிவில்₹50கோடிக்கு மேல் லாபம் பார்க்க இயலாது... இதே ஊர்வசி மேடம் திரு ரசினிக்கோ ,விஜய்கோ ஓன்றுமே சமுகத்திற்கு செய்யாமல் ₹200-250 கோடி தனி மனித ஊதியம் எவ்வாறு வாங்கிறார்கள் என்று நியாயபடுத்தமுடியுமா??


beindian
ஆக 04, 2025 19:26

ஆடுஜீவிதம் படத்திற்கு எப்படி கொடுப்பார்கள் எம்புரானில் சங்கிளை பிரித்திராஜ் வெளுத்தெடுத்துவிட்டாரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை