உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாபர் சாதிக் கைது ; அரசியல்வாதிகளும் சிக்குவர் ! என்.சி.பி. அதிகாரி பேட்டி

ஜாபர் சாதிக் கைது ; அரசியல்வாதிகளும் சிக்குவர் ! என்.சி.பி. அதிகாரி பேட்டி

புதுடில்லி: 'போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார்' அரசியல்கட்சிகளுக்கும் வழங்கி உள்ளார். இது தொடர்பான நபர்கள் பெயர்களை விரைவில் வெளியிடுவோம் என என்.சி.பி. ( மத்திய போதை மருந்து தடுப்பு பிரிவு ) அதிகாரி ஞானேஸ்வர் சிங் கூறியுள்ளார். இது குறித்து ஞானேஸ்வர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம். திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4xmcodkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.

தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் ?

அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ