உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; மனித உரிமை ஆணையம் விசாரணை

போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; மனித உரிமை ஆணையம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இன்று (ஜூலை 03) இந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது. மரண வழக்கில், ஐ.ஜி.,க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சம்பவம் தொடர்பாக, 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐ.ஜி.,க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஜூலை 03, 2025 18:38

கண்ணதாசன் என்று ஒரு ஆள் வருவாரே..... அவர் இருக்கிறாரா.... இல்லை போய் விட்டாரா.... பதவியை சொன்னேன்.... நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் !!!


visu
ஜூலை 03, 2025 20:28

அவர்தான் மனித உரிமை ஆணைய தலைவர்


பேசும் தமிழன்
ஜூலை 04, 2025 08:05

அவர் இதுவரை ஆளையே காணோம்..... அதற்க்காக தான் மக்கள் கேட்கிறார்கள்


Sudha
ஜூலை 03, 2025 17:48

மனித உரிமை ஆணையம் ஒரு மாதத்தில் எவ்வளவு வழக்குகள் விசாரிக்கிறார்கள்?


V Venkatachalam
ஜூலை 03, 2025 16:12

மனித உரிமைகள் ஆணையம் யாரோட கட்டுப்பாட்டில் இருக்கு? அது தனியா விசாரிச்சு தனியா முடிவெடுக்க முடியாதே.. மொட்டை தலையில் வச்சிருக்கிற சவுரி முடிதானே அது.. நிகிதா வின் உத்தரவுகளை செயல் படுத்தின அதிகாரிகளை காப்பாத்த போடும் நாடகம். அம்புட்டு தான்.


Manaimaran
ஜூலை 03, 2025 15:35

இனி இவனுக வந்து அருத்து தள்ளீருவாங்க


ديفيد رافائيل
ஜூலை 03, 2025 15:23

ஒருவழியா மனித உரிமை ஆணையம் இந்த விஷயத்தை எடுத்துட்டாங்க


Ganesan
ஜூலை 03, 2025 14:52

புகார் அளித்தவர்கள் புகாரின் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை