உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடா கல்லுாரிகளுடன் சேர்ந்து ஆள்கடத்தல்: ஈ.டி., விசாரணை

கனடா கல்லுாரிகளுடன் சேர்ந்து ஆள்கடத்தல்: ஈ.டி., விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மாணவர் என்ற போர்வையில் கனடா அழைத்துச் சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்குள் அவர்களை சட்டவிரோதமாக அனுப்பும் மோசடி நடந்து வருகிறது. இந்த ஆள்கடத்தலில் கனடாவைச் சேர்ந்த கல்லுாரிகள் மற்றும் இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

விசாரணை

கடந்த 2022, ஜனவரியில் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவின் எல்லையில், கடும் பனி மற்றும் குளிரில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். இவர்கள் நான்கு பேரும் குஜராத்தின் தின்குசா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கனடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களை கனடாவுக்கு அனுப்பிய பாவேஷ் அசோக்பாய் படேல் என்ற புரோக்கரை கைது செய்தனர். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வந்தது.இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:கனடாவில் உள்ள கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. 262 கனடா கல்லுாரிகளுடன், இந்த இரண்டு இந்திய நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.கடந்தாண்டு மட்டும், ஒரு இந்திய நிறுவனம், 25,000 மாணவர்களையும், மற்றொரு நிறுவனம், 10,000 மாணவர்களையும், கனடா கல்லுாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளன.

பறிமுதல்

இதற்கு பிரதிபலனாக, இந்திய நிறுவனங்கள் கூறும், அமெரிக்கா செல்ல விரும்பும் சிலருக்கு, கனடா கல்லுாரிகள் இடம் அளிப்பதாக கடிதம் கொடுக்கும். மாணவர் விசா கிடைத்ததும், அவர்கள் கனடா வழியாக, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த மாணவர்கள், கல்லுாரியில் சேராததால், அவர்கள் செலுத்தும் கல்வி கட்டணமும் திருப்பித் தரப்படும்.இதற்காக, இந்த இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு, குஜராத், மஹாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் புரோக்கர்கள் உள்ளனர்.ஒரு நிறுவனத்துக்கு, 3,500 பேரும், மற்றொன்றுக்கு, 1,700 பேரும் புரோக்கர்களாக உள்ளனர்.இவ்வாறு சட்டவிரோதமாக கனடா வாயிலாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு, தலா 60 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்த ஆள்கடத்தலில் கனடா கல்லுாரிகளுக்கும், இரண்டு இந்திய நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், பல ஆவணங்கள், 19 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:08

இது ஒரு பெரிய பிசினஸ் ..... ரொம்ப வருசமா நடக்குது .....


jayvee
டிச 26, 2024 08:57

அதிகளவில் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகவேண்டும் என்று நினைக்கும் மக்கள் குஜராத் மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் .. குறிப்பாக பஞ்சாபிகள் எங்கு வசித்தாலும் அங்கு பலவிதமான பிரச்சனைகளையும் உருவாக்குக்குவார்கள் ..வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்ததைப்போல .. அடுத்து குஜராத்திகள் ..அவர்களின் ஒரே குறிக்கோள் தாங்கள் செல்லும் நாட்டின் வளத்தை சுரண்டவேண்டும்.. இதுவும் வெள்ளைக்காரன் யுக்திதான் .. அடுத்து வருவது மலையாளிகள் பிறகு தமிழர்கள் தொடர்ந்து தெலுங்கர்கள் ...இதில் மலையாளிகள் சொந்த நாட்டை அவர்களுக்கு நாடு என்பது கேரளா மட்டுமே மறக்கமாட்டார்கள் ..தங்களது அடையாளத்தையும் இழக்கமால் திரும்பி வருவார்கள் ..தமிழர்களின் சிறப்பு செல்லும் இடமெல்லாம் ஜாதி பிரச்னையை பெரிதாக்குவார்கள் .. பெரியரையும் வைத்து அரசியலும் செய்வார்கள் ..ஆனால் வாயில் தமிழும் வராது தாய் நாட்டின் மீது பாசமும் இருக்காது .. தெலுங்கர்கள் தங்களது ஆடம்பரத்தால் வெளிநாட்டில் உதைபட்டு உயிர்விட்டு பிறகும் அங்கேயே இருப்பர்கள் .


Kasimani Baskaran
டிச 26, 2024 07:56

ஆந்திர / தெலுங்கானா மற்றும் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இது போல நிறையப்பேர் செல்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இந்திய வம்சாவளியினர்களின் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவிலும் கனடாவிலும் அரசியல் செய்ய முடியாது. கனடாவில் துரதிஷ்டவசமாக காலிஸ்தானிகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.


அப்பாவி
டிச 26, 2024 07:00

இங்கிருந்து கள்ளத்தனமாக குடியேறியவங்கல்லாம் நாளைக்கி கஷ்டபட்டு உழைத்து முன்னேறிய இந்திய வம்சாவளியினராயிடுவாங்க. ஜீ போனா பூங்கொத்து குடுத்து, டான்ஸ் ஆடி வரவேற்பாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை