உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்

ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்

விசாகப்பட்டினம்: பயணியரின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் மனித வடிவ ரோபோ, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.மனித வடிவ ரோபோவின் பயன்பாடு, பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு ரோபோவை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே போலீஸ் படையின் கீழ், இந்த மனித வடிவ ரோபோ இயங்கும் என கூறியுள்ளனர். இதற்கு 'ஏ.எஸ்.சி., அர்ஜுன்' என பெயரிட்டுள்ளனர். இந்த மனித வடிவ ரோபோவை, முழுமையாக விசாகப்பட்டினத்திலேயே உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் வடிவமைத்து உள்ளனர்.இது பாதுகாப்பு கண்காணிப்பு, கூட்ட மேலாண்மை, துாய்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பொது அறிவிப்புகள் வெளியிடும். ஆர்.பி.எப்., போலீசாருடன் இணைந்து நடைமேடைகளில் ரோந்து பணிகளிலும் 'ஏ.எஸ்.சி., அர்ஜுன்' ரோபோவை ஈடுபடுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rathna
ஜன 24, 2026 12:33

முதலில் வந்தே பாரத் ரயில்களில் மர்ம அமைதி நபர்கள் கல் வீசுவதை தடுக்க கடும் சட்டங்களை கொண்டு வாருங்கள். அது மிக பெரிய பயணியர் பாதுகாப்பு பிரச்சனையாக வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் மாறி வருகிறது.


thangan
ஜன 23, 2026 23:17

ரோபோ அனைத்து துறையிலும் களமிறங்கி விட்டது


முக்கிய வீடியோ