உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காற்றில் கரையும் ஹூரியத் கூட்டமைப்பு:அமித் ஷா வருகை முன்னிட்டு 3 அமைப்புகள் விலகல்

காற்றில் கரையும் ஹூரியத் கூட்டமைப்பு:அமித் ஷா வருகை முன்னிட்டு 3 அமைப்புகள் விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை முன்னிட்டு, பாகிஸ்தான் ஆதரவு ஹூரியத் அமைப்பில் இருந்து மேலும் 3 அமைப்புகள் இன்று விலகியுள்ளன.ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு கட்சிகள், அமைப்புகளின் கூடாரமாக ஹூரியத் அமைப்பு இருந்து வருகிறது. 1993ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 26 அமைப்புகள் இடம் பெற்றிருந்தனர்.காலப்போக்கில் இந்த அமைப்பு இரண்டாக பிளவுபட்டது. எனினும் பெரும்பாலான அமைப்பினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இந்நிலையில், மத்திய அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.கடந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஹூரியத் அமைப்பில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். வாக்காளர்கள் பங்கேற்பும் அதிக எண்ணிக்கையில் இருந்தது.இதன் காரணமாக, ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் விலகத் தொடங்கியுள்ளன.இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் வருகைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, மூன்று அமைப்பினர் ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய அரசியல் கட்சி, ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும், தாங்கள் அந்த கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.இதை அமித் ஷா தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் மக்களுக்கு இந்திய அரசிலயமைப்பின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக, அமித் ஷா தெரிவித்துள்ளார்.இதேபோல, மார்ச் 25ல் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் என்ற இரு அமைப்புகள் ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொண்டன.இன்று ஸ்ரீநகர் சென்ற அமித் ஷா, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ், ராணுவம், துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.''எக்காரணம் கொண்டும் பயங்கரவாத செயல்பாடுகளை சகித்துக் கொள்ளக்கூடாது. ஊடுருவல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்,'' என்று அவர், பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
ஏப் 09, 2025 03:59

வக்ப் சட்டதிருத்தத்துக்கும் இதற்கும் தொடர்பு உண்டு என்று யூகிக்ககத்தோன்றுகிறது.


தத்வமசி
ஏப் 08, 2025 22:35

ஹுரியத்தில் உள்ளவர்களுக்கு தேவை என்ன ? பணம். அது எப்படி வந்தால் என்ன ? முன்பு பாகிஸ்தான் கொடுத்தது. இப்போது காஷ்மீர் அரசியல் கொடுக்கப் போகிறது. நம்ம ஊரு லட்டர் பேடு கட்சிகள் எப்படி கோடிகளில் புரளுகின்றனர் ? அப்படித்தான் அங்கும். இந்தியாவாக இருந்தால் என்ன ? பாகிஸ்தானாக இருந்தால் என்ன ? தேவை ஒன்று தான். பணம்.


மீனவ நண்பன்
ஏப் 08, 2025 22:19

ஹுரியத் தலைவர்களுக்கு பொதுவாகவே ரெண்டு கோரிக்கைகள் இருக்கும் முதலாவது பிள்ளைகளுக்கு மெடிக்கல் சீட் மற்றொன்று குடும்ப உறுப்பினருக்கு அரசாங்க வேலை இதை ஒத்துக்கொண்டால் தேசிய நீரோட்டத்தில் கலந்து விடுவார்கள்


Rajarajan
ஏப் 08, 2025 21:05

நமது உள்துறைக்கு சரியான ஆள்.


தஞ்சை மன்னர்
ஏப் 08, 2025 21:04

ஹி ஹி நம்பிட்டோம் ஹி ஹி நம்பிட்டோம் உசுரு முக்கியம் மங்குனி


Mecca Shivan
ஏப் 08, 2025 21:54

தலைவரை இந்த இடத்தில ஏன் கிண்டல் செய்கிறீர்கள் 200 ஓவா உபீஸ் அவர்களே


Kumar Kumzi
ஏப் 09, 2025 02:17

வந்தேறி மூர்க்க காட்டேரி தஞ்சை மன்னனுக்கு இந்தியாவில் என்னடா வேல


Ramesh Sargam
ஏப் 08, 2025 20:43

பாஜக காற்று மேலும் பலமாக அடித்தால், நாட்டில் உள்ள அந்த அமைதி மார்கத்தினர் மொத்தமாக கரைந்துவிடுவார்கள். அப்புறம் இந்தியர்கள் அமைதியாக வாழலாம்.


தஞ்சை மன்னர்
ஏப் 08, 2025 20:27

அங்கே என்ன நடக்குது என்று எங்களுக்கு தெரியும் இங்கே உக்கார்ந்து பீலா உட வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை