உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  காரில் வைத்தே மனைவியின் கால்களை வெட்டிய கணவன்

 காரில் வைத்தே மனைவியின் கால்களை வெட்டிய கணவன்

பந்தலுார்: கேரளா மாநிலம், கண்ணனுாரை சேர்ந்த சிஜு, 40, கர்நாடக மாநிலம், வீராச்சிபேட்டை மல்லிகா, 33, தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் கடந்த மாதம் சண்டை நடந்துள்ளது. மல்லிகா, குழந்தைகளை அழைத்து கொண்டு, நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் உள்ள சித்தி பாக்கியலட்சுமி வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் அங்கு வந்த சிஜு, மல்லிகாவை சமாதானம் செய்து, கேரளா, வயநாடு மேப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு, நேற்று மாலை காரில் பந்தலுார் திரும்பினார். மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் வந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட, காரில் மறைத்து வைத்திருந்த கத்தியால், மல்லிகாவின் இரண்டு கால்களிலும் சிஜு வெட்டினார். இதில், படுகாயமடைந்த மல்லிகாவை, அவ்வழியாக சென்றவர்கள், ஊட்டி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிஜு கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rathna
ஜூன் 18, 2026 12:21

மனித மிருகங்கள்.


Ramesh Sargam
ஜூன் 13, 2026 13:01

மறு பக்கத்து வாதத்தையும் கேட்டு, முடிவு எடுக்கவும். கருத்துக்கள் பதிவிடவும்.


shyamnats
ஜூன் 16, 2026 08:36

பிடிக்க வில்லை என்றால் பரஸ்பரம் சட்ட பூர்வமாக பிரிந்து விடுங்கள். அதை விட்டு விட்டு எந்த விதமான கருத்து வேறுபாடு என்றாலும், தான் கட்டிய மனைவியை, மனுஷியை வெட்டுவது, என்பது காட்டு மிராண்டி தனம். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். சமயங்களில் பல்லுக்கு பல் என்ற தத்துவம் கூட சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.


Chandhra Mouleeswaran MK
ஜூன் 16, 2026 20:21

யாரைக் கேட்பது? அந்தக் கொலைகாரனையா? குழந்தைகளின் முன்னிலையில் தாயின் கால்களை வெட்டிய ஒரு கிராதகனிடம் என்ன கூந்காக விசாரணை செய்ய வேண்டும்? அதே காரில் அதே பெண்ணிடம் அதே கத்தியைக் கொடுத்து அதே கிராதகனின் கால்களை வெட்ட வேண்டும்


SUBRAMANIAN P
ஜூன் 18, 2026 14:04

கத்தியெல்லாம் காரில் மனைவியுடன் பயணம் செய்யும்போது வைத்திருக்கிறானென்றால் அவன் விவகாரம் பிடித்த சைக்கோவாகத்தான் இருக்கவேண்டும். அவனையெல்லாம் முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கவேண்டும். இஷ்டமில்லையென்றால் நீ உன்வழி நான் என்வழி என்று நாகரிகமாக பிரிவதைவிட்டுவிட்டு கத்தியால் காலைவெட்டுவானாம் அவனுடைய பக்கம் நியாயம் இருந்தாலும் இது அநீதிதான்.


Raajan
ஜூன் 13, 2026 06:11

இந்த மாதிரி சைக்கோவிற்கு எப்போது கடுமையான தண்டனை கொடுக்க போகிறார்கள்?


visu
ஜூன் 16, 2026 16:17

முதலில் ஜாமீன் கொடுப்பாங்க ஏன்னா காலில் வெட்டியதால் கொலை முயற்சி இல்லையாம் அப்புறம் 10 வருஷம் வழக்கு நடக்கும் அதுக்குள்ள அவங்களே வெறுத்து போய் ஒண்ணா சேந்தாலும் சேர்ந்துடுவாங்க.நியாயமான காரணங்களுக்கு விவாக ரத்தை சுலபமாக்க வேண்டும் ஜீவனாம்சம் நியாயமாக தொகை இருக்கவேண்டும் சொத்தில் பாதி வருமானத்தில் பாதி என்றில்லாமல்


சமீபத்திய செய்தி