உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியின் உடலை 40 துண்டுகளாக வெட்டிய கணவன்; ஜார்க்கண்டில் நடந்த கொடூரம்!

மனைவியின் உடலை 40 துண்டுகளாக வெட்டிய கணவன்; ஜார்க்கண்டில் நடந்த கொடூரம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை 40 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா. இவருக்கு வயது 25. இவர் கசாப்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது மனைவியிடம் எதுவும் சொல்லாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தென் மாநிலத்திற்கு தப்பி ஓடி வந்துள்ளார். மனைவி கணவனை தேடி பரிதவித்துள்ளார். நரேஷ் மனைவிடம் தொலைபேசியில் கூட பேசாமல் இருந்துள்ளார். நவ.,10ம் தேதி ஜார்க்கண்ட் திரும்பி உள்ளார். அவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை 40 துண்டுகளாக வெட்டி உள்ளார். உடல் பாகங்களை வனப்பகுதியில் வீசியுள்ளார்.கொல்லப்பட்ட ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 24ம் தேதி ஜோர்டாக் கிராமத்திற்கு அருகே ஒரு தெருநாய் மனித உடல் உறுப்புகளுடன் சுற்றி திரிந்தது. இது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் பெண் உடல் வெட்டி கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். நரேஷ் பெங்ரா என்பவர் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.'தனது திருமணத்தைப் பற்றி அறிந்து தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜார்க்கண்ட் திரும்பும் படி வற்புறுத்தினார். இதனால் கொலை செய்தேன். வனப்பகுதியில் உடலை வீசுவதற்கு முன்பு, 40 முதல் 50 துண்டுகளாக வெட்டினேன்' என நரேஷ் பெங்ரா ஒப்புக் கொண்டார். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் அசோக் சிங் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட நபர் தமிழகத்தில் இறைச்சிக் கடையில் பணிபுரிந்தவர் ' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu.
நவ 28, 2024 09:40

இவனையும் அப்படியே 50 துண்டுகளாக வெட்டி மிருகங்களுக்கு இரையாக போட வேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தொல்லை கொடுப்பவர்களுக்கும், உணவு மற்றும் மருந்துகள் கலப்படம் செய்பவர்களுக்கும் கொடிய மரண தண்டனை விதிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை