உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹூண்டாய் காரில் கோளாறு: விளம்பரப்படுத்திய ஷாருக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு

ஹூண்டாய் காரில் கோளாறு: விளம்பரப்படுத்திய ஷாருக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹூண்டாய் காருக்கு விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஹூண்டாய் கார் வாங்கிய ராஜஸ்தானை மாநிலத்தை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் வாங்கிய ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளாக கூறி அவர் தொடர்ந்த வழக்கில், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அந்த காரை விளம்பரப்படுத்திய ஷாருக் கான், தீபிகா படுகோன் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

வழக்கு பின்னணி இதோ!

கீர்த்தி சிங் 2022ம் ஆண்டு ஹூண்டாய் அல்காசர் காரை ரூ.24 லட்சத்திற்கு வாங்கி உள்ளார். இந்த கார் சிறந்தது. மிகவும் பாதுகாப்பானது என்று ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே விளம்பரத்தில் கூறியதை பார்த்து வாங்கியதாகவும், கார் வாங்கிய 6 முதல் 7 மாதங்களில் காரில் பல பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரத்தால் வந்த வினை!

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MUTHU
ஆக 27, 2025 21:24

இவர்கள் வண்டியை பார்த்து தானே வாங்கணும்.இப்போ சரியில்லையின்னா என்ன செய்ய. சினிமா நடிகர்களை நம்புதல் என்று மாறுமோ.


M Ramachandran
ஆக 27, 2025 20:22

இது ஏதுடா வம்பாய் போச்சு. இனி வருமானத்திற்கு ஆசை பட்டு விளம்பரத்திற்கு மூஞ்சியை காட்ட மாட்டார்கள். இங்கும் விஜய் சேதுபதி இது மாதிரி மாட்டிக் கொண்டு திண்டாடுகிறார்.


V Venkatachalam
ஆக 27, 2025 18:46

என்னை பொறுத்தவரை இந்த வழக்கு அவசியம் தான். மூஞ்சி கொஞ்சம் பாக்குற மாதிரி இருந்தா போதும். காசு பாக்கலாம் ங்கிறது என்ன நியாயம்? அவனோ அவளோ அதே காரை வாங்கி ஒரு ஆறு மாதங்கள் ஓட்டிப்பார்த்து அப்பறம் அது நல்லா இருக்கு ன்னு சொன்னா அது நியாயம். கம்பெனிகாரன் சொல்ல சொல்றதை அப்புடியே ஒப்பித்து விட்டு லக்ஷ கணக்கில் காசு வாங்குறது என்பது திருடுவதற்கு சமம்.


Vasan
ஆக 27, 2025 17:27

I dont think this case against cinema actors, who acted in advertisements too, can survive.


Perumal Pillai
ஆக 27, 2025 17:10

ஈமு கோழி மதிப்புக்குரிய அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் .


Premanathan S
ஆக 27, 2025 17:10

கம்பெனி மீது வழக்கு போடலாம் அது நியாயம் விளம்பரம் செய்த நடிகர், நடிகை ஒன்றும் டிசைன் அல்லது குவாலிட்டி கண்ட்ரோல் என்ஜினீர் அல்லவே கேசு வேஸ்ட்


V Venkatachalam
ஆக 27, 2025 19:59

ஆமாம் இன்ஜினியர் இல்லை தான். ஆனா இந்த மூஞ்சிங்க நாங்க இன்ஜினியர் இல்லை. அதனால் பொய் சொல்ல முடியாது ன்னு சொல்லியிருக்கணும். பணத்துக்கு பல்லிளிக்கிற மூஞ்சிகள் அப்புடி சொல்லலியே. அந்த கம்பெனி காரன் அவனோட இஞ்சினியரை வச்சி ஏன் சொல்லலை. அவன் மூஞ்சி நல்லா இல்லையா?


ஆரூர் ரங்
ஆக 27, 2025 16:14

அம்பாசிடர் காருக்கு நட்சத்திரங்கள் யாரும் பிராண்ட் அம்பாசடராக இருந்ததாகத் தெரியவில்லை. தானாகவே விற்றது.


Artist
ஆக 27, 2025 16:45

வேற வழியில்லாமல் வாங்க வேண்டியிருந்தது …