உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கும் முதல்வர் பதவி வேணும்: மவுனம் கலைத்தார் அஜித்பவார்!

எனக்கும் முதல்வர் பதவி வேணும்: மவுனம் கலைத்தார் அஜித்பவார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: 'எனக்கும் முதல்வர் பதவி வேண்டும்,' என மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கோரியது, கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இந்த கூட்டணி, பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது. இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராகும் நோக்கத்தில் தொகுதி பங்கீடு பற்றி மூன்று கட்சிகளும் பேசி வருகின்றன. மூன்று கட்சி நிர்வாகிகளும் சுமுகமாக பேசி முடித்து விட்டதாகவும், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.ஆனால், தேர்தலுக்கு பின் யார் முதல்வராக வருவார் என்பதைப்பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், 'பா.ஜ., பார்லிமென்டரி குழு தான் அதற்கான முடிவை எடுக்கும்' என்று, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருக்கிறார்.இந்நிலையில், தனக்கும் முதல்வர் பதவி மீது ஒரு கண் இருப்பதை துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் வெளிப்படுத்தியுள்ளார்.புனேயில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு கட்சியிலும் தொண்டர்கள் தங்கள் தலைவர் தான் முதல்வராக வேண்டும் என்பார்கள். நானும் முதல்வர் ஆக வேண்டும் என்கிறேன். ஆனால், முதல்வர் ஆக வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வாழ்த்தினால் போதாது, அதற்கு பெரும்பான்மை வேண்டும்.வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் யாரை முதல்வராக்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டும். எனினும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒற்றுமையுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு அஜீத் பவார் கூறினார்.இதேபோல, முதல்வர் பதவியை தக்க வைக்க, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் தீவிரமாக உள்ளது. தாங்கள் இழந்த முதல்வர் பதவியை எப்படியும் கைப்பற்றி விடுவது என்று பா.ஜ., கட்சியினரும் தீவிரமாக உள்ளனர். இதனால் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், யாருக்கு முதல்வர் பதவி என்பதில் சிக்கல் எழும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Oviya Vijay
செப் 17, 2024 23:50

ஒவ்வொருத்தனும் ஆளுங்கட்சிக்கு சம்பந்தப் பட்ட தலைவர்களை எப்படி எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க.


Oviya Vijay
செப் 17, 2024 23:11

பிஜேபியை மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.


சமூக நல விரும்பி
செப் 17, 2024 21:16

குடுமி பிடி சண்டை ஆரம்பம் ஆகி விட்டது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 21:03

அஜித் பவார் தேவையில்லாத ஆணி, இவரைபோன்ற ஊழல் பேர்வழியை சேர்த்ததால் பிஜேபி குத்தான் கெட்ட பெயர்.


Sivakumar
செப் 18, 2024 00:32

ஏதோ இவர் தான் முதலாவது ஊழல் பேர்வழி பிஜேபில் சேர்ந்ததுபோல அலுத்துக்கவேண்டாம். LK அத்வானியால் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற எடியூரப்பாவை பிஜேபியில் கொண்டுவந்ததுமுதல், ஹிமந்தா பிஸ்வா சர்மா, முக்குல் ராய் இப்படி ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கு. போலி தேச பக்தர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை


Iyer
செப் 17, 2024 20:57

இவரையும், praful patel ஐயும் பிஜேபி யில் ஏன் சேர்த்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது,


Oviya Vijay
செப் 17, 2024 20:47

தன் வினை தன்னைச் சுடும். பிஜேபி செய்து வரும் திருவிளையாடல்களுக்கு அவர்களே அதன் எதிர் பலனை அனுபவிக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது...


r ravichandran
செப் 17, 2024 20:38

இந்த முறை பிஜேபி கூட்டணி அங்கு படு தோல்வி அடையும்.


r ravichandran
செப் 17, 2024 20:37

பிஜேபி கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மும்பையில் இருந்து கூறும் தகவல்கள், இந்த முறை பிஜேபி கூட்டணி படு தோல்வி அடையும் என்பதே. காரணம் போதுமான அளவிற்கு பிஜேபி மற்றும் ஷிண்டேவிற்கு மெஜாரிட்டி இருந்தும் தேவை இல்லாமல் ஊழல் மன்னன் என்று பிஜேபி கட்சி கூறிய அஜித் பவாரை கூட்டணியில் சேர்த்து கொண்டு அவருக்கு துணை முதல் அமைச்சர் பதவியை கொடுத்தது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்.


SANKAR
செப் 17, 2024 19:53

he will go back to Sharad pawar if denied.


தாமரை மலர்கிறது
செப் 17, 2024 19:10

எல்லோருக்கும் ஒன்னுன்னு கொடுக்க, முதல்வர் பதவி என்ன லாலி பாப்பா? அஜித்தும் ஷிண்டேவும் பிஜேபி உருவாக்கிய களிமண்ணு பொம்மைகள். இதுங்க குள்ளாற, அடிச்சுக்கிறது, காமெடியா இருக்கு. வடிவேலு சொல்ற மாதிரி, யாரு பெருசுன்னு சும்மா அடிச்சு காட்டு...


புதிய வீடியோ