உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாய் திறக்கவில்லை!

வாய் திறக்கவில்லை!

பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களைப் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, வேலைவாய்ப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்னைகளைப் பற்றியும் பிரதமர் பேசவில்லை.தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

ரூ.6 லட்சம் கோடி மோசடி!

மோடி அரசின் 11 ஆண்டுகளில் 6.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. பணமதிப்புஇழப்புக்குப் பின்னும் கடந்த ஆண்டுகளில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

பாகிஸ்தான் ஆதரவு!

காங்கிரஸ் இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. ஒரு பிரிவு பாகிஸ்தானையும், மற்றொரு பிரிவு இந்தியாவையும் ஆதரிக்கிறது. ராகுல், ரேவந்த் ரெட்டி போன்ற தலைவர்கள் முதல் ரகம். அதனால் தான் பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர்.சம்பித் பத்ரா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை