உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன் : லலித் மோடி

தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன் : லலித் மோடி

லண்டன்: இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் என ஐ.பி.எல்., கிரிக்கெட் முன்னாள் கமிஷனர் லலித் மோடி தெரிவித்தார்.ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை துவக்கி, அந்த அமைப்பின் கமிஷனராக இருந்தவர் தொழிலதிபர் லலித் மோடி, 60. இந்த போட்டிகளை நடத்துவதில் ரூ.460 கோடி வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கிரிக்கெட் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது குற்றப் பரிவு போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்ய இருந்த நேரத்தில் 2010-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பியோடினார். அன்று முதல் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லலித் மோடி இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, என் மீது எந்த நீதிமன்றத்திலும் வழக்குகள் இல்லை. சட்ட பிரச்னையும். இருப்பினும் நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ‛மேட்ச் பிக்ஸ்' செய்ய சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்ததது. அவரது ‛ஹிட்' லிஸ்டில் என் பெயர் இருப்பதாக எனக்கு பாதுகாப்பு வழங்கிய மூத்த போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். இதன் காரணமாக தான் நான் இந்தியா விட்டு வெளியேறினேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 26, 2024 14:44

இப்படி சொல்லிச் சொல்லி கூட தாவுத் இப்ராஹிம் தான் கூறினார் என்று கூட பின் வரும் நாள்களில் இவர் கூறலாம். பணம் பத்தும் செய்யும். தாவுத் என்ன நேரில் வந்து அமோதிக்கவோ எதிர்க்கவோ வா போகிறார். சும்மா அடிச்சு விடு நைனா.


ameen
நவ 26, 2024 11:33

மோடி ஆட்சி சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்ல வருகிறார் இந்த நல்லவர் லலித் மோடி


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 09:04

தீவிரவாதத்துக்கு எதிராக பாரதம் பல்லாண்டுகாலம் போராடி வந்தாலும் தாவூதை உயிருடன் பிடித்துக் கொண்டு வரமுடியாத கேவலம் .....


R SRINIVASAN
நவ 26, 2024 07:55

மோடிஜியை தரக்குறைவாக பேசுவதுற்கு உங்களுக்கு வெட்கமேயில்லையா? வெளி நாட்டில் பதுங்கியிருக்குக்கும் விஜய் மல்லையா நிரவ் மோடி போன்றவர்களை அந்த நாட்டு சட்டத்தின் படிதான் கைது செய்ய முடியும். இதனால்தான் அவர்களை தண்டிக்க மதிய அரசு அவர்களை இந்தியாவிற்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறது. ஜவர்ஹலால் நேரு எட்வீனா மவுண்ட் பாட்டெனுடன் எப்பேர்ப்பட்ட உறவு வைத்திருந்தார் என்பதை நாடு அறியும். இந்திரா காந்தியும் பி சிதம்பரமும் மத்ரும் சோனியா காந்தியின் குடும்பமும் எத்தனை ஊழல் செய்தார்கள் என்பதை நாடு அறியும். நீங்கள் இம்மாதிரி பேசுவது நாட்டை துண்டாட வழிவகுக்கும்.


அப்பாவி
நவ 26, 2024 15:40

நீரவ் மோடி ஜீயோடு டாவோஸ் மாநாட்டுக்குப் போய் அப்பிடியே லண்டனுக்கு ஓடிட்டார். அவரைப் புடிக்கத் துப்பில்லை. இங்கிலாந்தோட தடையில்லா வர்த்தகத்துக்கு அடி போடறாங்க.


Mani Vellachamy
நவ 26, 2024 05:45

ஏமாற்றிவிட்டு ஓடி விட்டு இப்பொழுது ஏதேதோ காரணம் சொல்லுது.


அப்பாவி
நவ 26, 2024 05:03

இவிங்கள்ளாம் இங்கேயே இருந்திருதால் அதானியை தூக்கி சாப்புட்டிருப்பாங்க.


அப்பாவி
நவ 26, 2024 04:57

நீரவ் மோடியும் இவரை மாதிரியே நல்லவரு.


Easwar Kamal
நவ 25, 2024 23:36

மோடிஜி உங்கள் ஊர்க்காரர். தன் குடுபத்துக்கு உதவி பண்றோர்ரோ இல்லையோ? ஆனாள் தன நண்பர்களுக்கு எந்த விதமான உதவியும் செய்ய தயங்கமாட்டார். அதானி koothathodu சேர்ந்து கொண்டால் அடுத்த நாட்களிலே ரொம்ப நல்லவர் ஆக்கபடுவீர்கள். பார்க்கலாம் அடுத்த வருடம் டிரம்ப் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டால் மோடிஜி தன் நண்பர்கள் கூட்டத்துக்கு பகைத்தகொள்ளவும் வாய்ப்பு உள்ளது.


Ramesh
நவ 26, 2024 07:51

உனக்கு என்னப்பா


ஜெய்ஹிந்த்புரம்
நவ 25, 2024 23:17

நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். - ம்ம்ம் அப்புறம்.. திரும்பி வரலாமுல்லெ.


Ramesh Sargam
நவ 25, 2024 20:09

தான் செய்த ஊழலை மறைக்க இப்படி தாவூத்தின் மேல் பழி. இல்லை, இல்லை, நான் தாவூத் ஆதரவாளன் இல்லை. ஆனால் இந்த லலித் மோடி கூறும் காரணம் சரியில்லை என்றுதான் கூறவருகிறேன். இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் இந்த லலித் மோடி? இப்பொழுது எங்கிருந்து பேசுகிறார்? கொலை மிரட்டல் இருந்தால் போலீசை நாடவேண்டும். அதைவிட்டு விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடலாமா...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை