உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கிறது; விமர்சனங்களுக்கு நிதின் கட்கரி பளீச்

மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கிறது; விமர்சனங்களுக்கு நிதின் கட்கரி பளீச்

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.பெட்ரோலில் 20% எத்தனை நாள் கலக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தாலும், அது உண்மைக்கு புறம்பானது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த சூழலில், நிதின் கட்கரி மகன் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால் அவர் எத்தனாலை அதிக அளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்ய நான் வழிகாட்டுகிறேன். நான் ஆலோசனைகளை வழங்குகிறேன். ஆனால் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார். அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை இருக்கிறது. அதோடு ஒரு சாராய ஆலை, மின் உற்பத்தி மையமும் எனக்கு இருக்கிறது. நான் எனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக விவசாயத்தில் பரிசோதனை செய்வதில்லை. உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன்.நான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன், நான் இதையெல்லாம் என் சொந்த சம்பாத்தியத்திற்காகச் செய்யவில்லை, இல்லையெனில் நீங்கள் வேறு ஏதாவது நினைக்கலாம். எனக்கு எனது வருமானம் போதுமானது. மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறது. எனக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் இயக்கப்படுகின்றன.இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

pmsamy
செப் 15, 2025 07:10

அப்போ ராஜினாமா பண்ணிட்டு போ


vivek
செப் 15, 2025 09:28

குமுட்டை


V Venkatachalam
செப் 15, 2025 12:40

டமில் நாட்டில் இருக்குற அப்பனுக்கும் மவனுக்கும் எக்ஸ் நிதி முந்திரி சொன்ன மாதிரி 30000 கோடி நேர்வழியில் கிடைக்கும்போது இந்த ராஜினாமா கிண்டல் சுண்டல் எல்லாம் வச்சுக்கலாம். கொள்ளையடித்து கும்மியடிக்குறவனுங்க முதலில் ராஜினாமா செய்யட்டும். அதை கேக்க துப்பு இல்லாதவனுங்களுக்கு ரோஷம் ஒரு கேடா?


நிக்கோல்தாம்சன்
செப் 15, 2025 02:42

நீ இந்தியாவுக்கே கேடடா குண்டா . 20 சதவீதம் எத்தனால் கலந்தால் பெட்ரோலின் விலை 20 சதவீதம் கம்மியாயிருக்க வேண்டும் , ஆனால் நடப்பதென்னவோ ?


ஆரூர் ரங்
செப் 15, 2025 12:06

நம்முடைய தேவை குறைந்த விலையல்ல. தரமான நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் தடையற்ற போக்குவரத்து. இதெல்லாம் சரியாக இருந்தாலே பெட்ரோல் தேவை குறையும். வாகனப் பெருக்கமும் நெருக்கடியும் சூழ்நிலைக் கேட்டை உருவாக்கும்.


Ramanujam Veraswamy
செப் 14, 2025 23:32

Unfortunately retail prices of petrol remains the same despite mixing of upto 20% ethanol.


Vasan
செப் 14, 2025 21:14

Sir,In Tamilnadu, they earn more than 1000 Crore per month, even without what you say as brain


ஆரூர் ரங்
செப் 14, 2025 21:06

இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டுமே லாபம், தனியார் என்பதெல்லாம் மஹா பாவம். நாடு பின்தங்கியதற்கு முக்கிய காரணம் இந்த எண்ணங்கள்தான். எல்லா ஏழைகளும் நல்லவர்களுமல்ல. எல்லா பணக்காரர்களும் கெட்டவர்களுமல்ல.


raj82
செப் 14, 2025 20:13

Rahul mind voice: next road and transport to be with me.


Nandakumar Naidu.
செப் 14, 2025 20:11

நிதின் கட்கரி பரம்பரை பணக்காரர். அவருக்கு ஊழல் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.நேர்மையான மனிதர். அவர் சொல்வது உண்மை.ஏனென்றால், நான் மகாராஷ்டிராவில் 35 வருடங்கள் வாழ்ந்துள்ளேன்.அவரை குறை கூறினால் அழிந்து போவார்கள்.


என்றும் இந்தியன்
செப் 14, 2025 19:22

மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கிறது அந்த வழியை எனக்கு சொன்னால் நல்லது


theruvasagan
செப் 14, 2025 22:00

200 கோடி சம்பாத்தியம் என்ன. தொழில் பண்ணாமலேயே 30000 கோடிகள் கூட சம்பாதிக்கலாம். ஆனா அந்த டெக்னிக் கட்கரிக்கு மட்டும் இல்லை வேற யாருக்கும் தெரியாது. நீங்க கேட்க வேண்டிய இடம் வேற.


V Venkatachalam
செப் 14, 2025 19:12

விமர்சனம் செய்பவர்கள் எதிரிக்கட்சிகளில் உள்ள சுய சிந்தனை அற்ற அறிவிலிகள். கான்+கிராஸ் மற்றும் கட்டுமரம் தான் சுய லாபத்துக்காக சட்டத்தையே வளைத்தவன்கள். அவன்களை ஃபாலோ பண்றவன்கள் அரசியலை வியாபாரமாக்கி அப்பறம் அதையே கொள்ளையடிக்கிற வழியாகவும் ஆக்கி விட்டான்கள். அவன்கள் சிந்தனை யெல்லாம் குறுக்கு வழியில் தான் போகும். 2ஜி கொள்ளை அதுக்கு ஒரு உதாரணம். நீங்கள் சட்டப்படி நடக்கிறீர்கள். தர்மத்தை கடைபிடிக்கிறீர்கள் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தூற்றுவோர் தூற்றட்டும்.


N Sasikumar Yadhav
செப் 14, 2025 18:35

இந்த தெளிவான அறிக்கை மாதிரி திருட்டு திராவிட மாடல் கட்சியினரை அறிக்கை விட சொல்லுங்க


K V Ramadoss
செப் 14, 2025 20:32

மூச்


சமீபத்திய செய்தி