உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேட்ரிமோனி தளத்தில் மாப்பிள்ளை தேடிய நடிகை ஐஸ்வர்யா லஷ்மிக்கு அதிர்ச்சி!

மேட்ரிமோனி தளத்தில் மாப்பிள்ளை தேடிய நடிகை ஐஸ்வர்யா லஷ்மிக்கு அதிர்ச்சி!

திருவனந்தபுரம்: 'திருமணத்துக்கு வரன் தேடும் இணையதளத்தில் எனது சுய விபரங்களை பார்த்த அனைவரும், அது போலியானது என்று நினைத்து விட்டார்கள்' என பொன்னியின் செல்வன் பட நடிகை ஐஸ்வர்யா லஷ்மி தெரிவித்தார்.நடிகை ஐஸ்வர்யா லஷ்மி. விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்தார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தார். கட்டா குஸ்தி படத்திலும் நாயகி வேடத்தில் நடித்தார்.தனக்கு திருமணத்துக்கு வரன் தேடிய அனுபவம் பற்றி அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்யும் படி எனது தாயாரிடம் கூறினேன். அதன்படி எனது படத்துடன் கூடிய மணப்பெண் விவரக் குறிப்பு மேட்ரிமோனி தளத்தில் இடம்பெற செய்யப்பட்டது. ஆனால், அதை எல்லோரும் போலி என்று நினைத்து விட்டனர்.திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எட்டு, பத்து, 25 வயதில் திருமணம் என்பது எனக்கு கனவாகவே இருந்தது. குருவாயூரில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் வளர வளர என் பார்வை மாறியது. என்னைச் சுற்றியுள்ள திருமணமானவர்களை நான் பார்க்கும்போது, ​​அவர்களில் பலர் மகிழ்ச்சியாக இல்லை.ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனக்கு இப்போது 34 வயதாகிறது, கடந்த ஒரு வருடத்தில், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன். எனக்கு தெளிவும் விழிப்புணர்வும் வந்தபோதுதான் திருமண வாழ்க்கை பற்றி உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
நவ 20, 2024 12:28

Ali யின் மூச்சிலும் பேச்சிலும், நாடி நரம்புகளிலும் திமுக தான் ஆளுமை செய்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பாவம். இதுக்கு சிகிச்சை யும் கிடையாது. என்ன பண்றது? கடந்து விடலாம். ஒரு ஓரமாக உக்காந்து புலம்பிண்டே இருக்கட்டும், பாவம். But one thing is true. "The Great family of Tamilnadu is truly happy ". இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் கூட்டுக் குடும்பங்களைப் பார்ப்பது மிகவும் அரிது.


Barakat Ali
நவ 20, 2024 10:04

கடந்த ஒரு வருடத்தில், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன் ... பார்த்து தாயி ..... டுமீல் நாட்டு பெரிய குடும்பத்தைப்பத்தி பேசி மாட்டிக்கப்போறீங்க .... அப்புறம் வட்டத்தை சதுரமாக்கிருவாய்ங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை