உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பா.ஜ.,வை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்தார்.பீஹார் மாநிலத்திற்கு விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இங்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார்.இந்நிலையில் பாட்னாவில் இன்று நடந்த அரசு விழாவில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் நிதிஷ்குமார் இருவரும் பல திட்டங்களை அறிமுகம் செய்துவைத்தனர்.இந்த விழாவில் நிதிஷ்குமார் பேசியதாவது:பா.ஜ.,வை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. இங்கு கூடிய உள்ள கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளது. முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் (ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி) என்ன செய்தார்கள்? அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றனர், ஆனால் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை ஒருபோதும் நிறுத்த முடியவில்லை,பீகாரில் பெயருக்குத் தகுந்த சுகாதாரப் பராமரிப்பு இல்லை. நல்ல கல்வி வசதிகள் இல்லை.ஜேடியு-பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் நடுப்பகுதியில் இருந்து பா.ஜ கூட்டணியில் இருந்தோம். 2014ல் பிரிந்தோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022ம் ஆண்டில், அவர் மீண்டும் பிரிந்தோம், இருப்பினும், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் ஒரு முறை தலைகீழாக மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.பா.ஜ..,வுடனான முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.அதனால் நான் இரண்டு முறை தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது.இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

अप्पावी
மார் 31, 2025 08:26

சொல்றவன் கேக்குறவன் படிக்கிறவன் மூணு பேருக்கும் வெவஸ்தை இல்லை.


சோழநாடன்
மார் 30, 2025 22:27

இனி நாள் விலகமாட்டேன் என்று நிதீஷ் கூறினார் என்றால் என்னைச் சரியாக கவனித்துக்கொள்... இல்லையென்றால் விலகிவிடுவேன் என்பதுதான் அதன் உட்பொருள். அமித்ஷா என்ன கடவுளா? உறுதிமொழி வாங்க.....


செல்வேந்திரன்,அரியலூர்
மார் 30, 2025 23:24

நீ சோழ நாடனா அல்லது திராவிட நாடனா உனக்கு இப்படி ஒரு கருத்தை பதிவிட வெட்கமாக இல்லை?


venugopal s
மார் 30, 2025 19:26

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல் உள்ளது!


Sampath Kumar
மார் 30, 2025 17:33

இந்த பச்சோந்தி எப்ப வேணுமானாலும் மாறும்.அப்ப அப்ப பசை ஏதிர்பார்க்கும் பசை கிடைத்து விட்டது போல. அதான் டைலாக்கு விடுது...


Palanisamy Sekar
மார் 30, 2025 16:44

தேச நலனே பெரிதாக எண்ணுகின்ற பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு போனால் இனி நிதீஷ் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கும். சிந்தித்து முடிவெடுத்த காரணத்தால் தப்பித்தார். இனி அமீத்ஷா அவர்கள் தமிழகத்தில் தங்களது கவனத்தை செலுத்தினால் நிச்சயம் 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நிச்சயம் உருவாகும். ஊழல் திமுக அமைச்சர்களை, வட்டம் மாவட்டங்களை தொடர்ந்து ஆதாரங்களோடு கைது செய்தால் நிச்சயம் பிகார் போன்றே தமிழகஹேயும் கைப்பற்றலாம்.


முருகன்
மார் 30, 2025 17:27

அதிமுக என்ன ஊழல் புரியாத உத்தம கட்சியை இதற்கு பதில் சொல்ல முடியுமா


Appa V
மார் 30, 2025 19:03

மகன் உதயநிதி மாதிரி கட்சியில் வாரிசாக உருவெடுத்துள்ளார்


புதிய வீடியோ