உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்: சொல்கிறார் மம்தா

மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்: சொல்கிறார் மம்தா

கோல்கட்டா:'நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்,' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவின் பேரணி நடைபெற்றது. மாணவர் பேரணியில் மம்தா பேசியதாவது:'நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன், மொழி பயங்கரவாதத்தை, வங்காளிகள் மீது பாஜ கட்டவிழ்த்துவிட்டது, பொதுமக்களாகிய நீங்கள், உங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.தலைமைத் தேர்தல் ஆணையம் மாநில அரசு அதிகாரிகளை மிரட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு, தேர்தல்கள் நடைபெறும்போது மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆண்டு முழுவதும் இருக்காது.வங்க மொழி இல்லையென்றால், தேசிய கீதமும் தேசிய பாடலும் எந்த மொழியில் எழுதப்பட்டன? சுதந்திர இந்தியாவில் வங்காளிகள் ஆற்றிய வரலாற்று பங்கை மக்கள் மறக்க வேண்டும் என்று பாஜ விரும்புகிறது. இந்த மொழியியல் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.இவ்வாறு மம்தா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iyer
ஆக 28, 2025 21:10

பங்களாதேஷ் பர்மா வில் இருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் - மேற்குவங்கம் வழியாகத்தான் பாரதத்தில் நுழைகிறார்கள். TMC குண்டர்கள் கோடிக்கணக்கில் பணம் லஞ்சம்பெற்று அவர்களுக்கு RATION CARD , VOTER ID , AADHAAR போன்ற ஆவணங்கள் பெற்று தருகிறார்கள். பாரதம் முழுதும் 6 கோடி குடியேறியுள்ளனர். 1 கோடி மேற்குவங்கத்தில் மட்டும் உள்ளனர்.


RAJ
ஆக 28, 2025 20:38

தேச துரோகி..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை