வட்டியுடன் கொடுப்பேன் ரேவண்ணா சவால்
ஹாசன்: ''இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்திருங்கள். எனக்கு கொடுத்ததை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பேன். அப்படி கொடுக்காவிட்டால் நான் தேவகவுடா மகனே அல்ல,'' என, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா சவால் விடுத்தார்.ஹாசனில் ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில் ரேவண்ணா பேசியதாவது:எனக்கு கொடுத்ததை நான் வட்டியுடன் தீர்ப்பேன். அப்படி தீர்க்காவிட்டால், நான் தேவகவுடாவின் மகனே அல்ல. மூன்று ஆண்டுகள் பொறுமையுடன் இருங்கள்.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், 50,000 ஓட்டுகளுக்கு ஒரு ஓட்டு குறைந்தாலும், ராஜினாமா செய்வதாக சவால் விடுத்தனர். அந்த தேர்தலில் ஸ்வரூப் களமிறங்க முயற்சித்தார். ஆனால் என் மனைவி பவானியை களமிறக்கும்படி நெருக்கடி ஏற்பட்டது.ரேவண்ணாவே போட்டியிடட்டும் என, தொண்டர்கள் ஆலோசனை கூறினர். இறுதியில் ஸ்வரூப் களமிறங்கினார். பிரஜ்வல் ரேவண்ணா பாவம். அவர் நல்லவர். அவருக்கு எதுவும் தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.