உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்பவும் சொல்றேன்... இ.வி.எம்., மெஷின் சூப்பர்; காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்!

இப்பவும் சொல்றேன்... இ.வி.எம்., மெஷின் சூப்பர்; காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி படுமோசமான தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் வெறும் 57 இடங்களை மட்டுமே வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது. இந்தத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் வழக்கம் போல, குற்றச்சாட்டையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்த தமிழகத்தைச் சேர்ந்த சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரத்திடம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் (இ.வி.எம்.,) குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது, அவர் கூறியதாவது: 2004ம் ஆண்டு முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டு வரும் தேர்தல்களில் நான் போட்டியிட்டு வருகிறேன். தனிப்பட்ட முறையில் நான் எந்த மோசமான அனுபவங்களையும் எதிர்கொள்ளவில்லை. அதேபோல, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களும் என்னிடம் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் மின்னணு ஓட்டுப்பதிவு மீதான நம்பத்தன்மையில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இ.வி.எம்., பயன்படுத்தி நடந்த தேர்தல்களில் வெற்றியும் பெற்றுள்ளோம். தோல்வியையும் சந்தித்துள்ளோம். இந்த விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டில் நான் மாறவில்லை. ஆனால், என்னுடை கட்சியின் நிலைப்பாடு மாறுபட்டது. இ.வி.எம்., மீதுள்ள நம்பகத்தன்மை இல்லாததற்கு அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும், என்று கூறினார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையே குறை கூறி வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கருத்து அவர்களின் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Sekar Shunmugaraj
டிச 02, 2024 20:14

மறுபடியும் சிறை செல்லாமல் இருக்க, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் பேசவேண்டும்


Thangaraj
நவ 26, 2024 11:41

கார்த்தி சிதம்பரம் நீட் தேர்வை ஆதரிக்கிறார்...ஓட்டிங் மிஷின் சரி என்கிறார்..அவரை தமிழ்நாடு தலைவரா போடுங்க...


K. Loganathan
நவ 27, 2024 11:29

தி மு க இல்லாமல் இவரால் ஜெயிக்க முடியுமா... வாய் சவடால்


J Ponnudurai
நவ 26, 2024 09:52

வேண்டாததை வேண்டி பேசும் நபர் .


duraiarasu
நவ 25, 2024 23:36

கார்த்திக் இறை உங்களை மன்னிக்க EVM மலபிரசிட்டிஸ் இந்தியர்களை ஏமாற்றலாம் ஆனால் இறை சக்தி உள்ளது.


Bala
நவ 25, 2024 22:27

சில வருடங்களுக்கு முன்பே நான் திரு கார்த்தி சிதம்பரத்தை பற்றி ஒரு கருத்தை தினமலரில் பதிவு செய்திருந்தேன். அந்த கருத்து இன்றும் தொடர்கிறது. திரு கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு நல்ல அரசியல் வாய்ப்புகளை தரும் கட்சி பாஜக மட்டுமே. பல வருடங்களுக்கு முன் திரு அத்வானி அவர்கள் திரு சிதம்பரம் அவர்களை பற்றி ஒரு நல்ல கருத்தை தெரிவித்து மறைமுகமாக பாஜகவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குள் கார்த்தி சிதம்பரம் அவர்கள் ஒரு நல்ல முடிவெடுப்பார் என்று நம்புகிறேன்


தாமரை மலர்கிறது
நவ 25, 2024 22:23

பிஜேபியுடன் ஒத்த கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வரும் கார்த்தி பிஜேபியில் இணைவது நல்லது.


Mohan Loganathan
நவ 25, 2024 20:03

அவர் பாஜக ஆதரவு கருத்தை தெரிவிக்கிறார் காரணம் இல்லாமலா இருக்கும்... நான் சொல்ல விரும்பவில்லை.. கார்த்திக் ஒரு பங்கு சந்தையில் விளையாடும் ஒரு வியாபாரி ஆகவே அவர் மீது பணம் சலவை வழக்கு உள்ளதே...


Mahalingam
நவ 25, 2024 20:40

ஓகே தமிழ்நாடு, பஞ்சாப் தெலுங்கானா கர்நாடகா jharkhand இந்த மாநில அரசை கலைக்க வழி மொழியுங்களேன்


M Ramachandran
நவ 25, 2024 19:04

இஙகுள்ள ஜென்மணிகளுக்கு எலான் மாஸ்க் யார் என்று தெரியாது. ஆனால் மோட்டு வேலயை பார்ப்பவர் என்றால் புரியும்


என்றும் இந்தியன்
நவ 25, 2024 17:40

Elon Musk praised India's election tem “India counted 640 million votes in 1 day. California is still counting votes.”


என்றும் இந்தியன்
நவ 25, 2024 17:34

அப்போ கார்த்தி சிதம்பரம் காங்கிரசில் இல்லையா என்ன???இப்படி இவிஎம் சப்போர்ட் செய்றார்???ராகுல் பார்த்தா இவருக்கு காங்கிரசில் இருந்து விலக்கு லெட்டர் வந்து விடுமே ??? எல்லா காங்கிரஸ் - திமுக கஸ்மாலங்களும் சொல்லும் ஒரே வார்த்தை வெற்றி பெற்றால் மக்கள் எங்கள் கொள்கையை மதிக்கின்றார்கள் தோல்வியுற்றால் இவிஎம் கோளாறு, ஹாக் செய்யப்பட்ட்து, சூடு வைத்திருக்கின்றார்கள் என்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை