உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் பேசப்போகிறேன்; மக்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்லுங்கள்: கேட்கிறார் ராகுல்

பார்லியில் பேசப்போகிறேன்; மக்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்லுங்கள்: கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பூஞ்ச்: '' காஷ்மீர் மக்களின் பிரச்னைகள் குறித்து பார்லிமென்டில் குரல் எழுப்ப தயாராக உள்ளேன். இதற்கு உங்களின் அறிவுறுத்தல் மட்டும் போதும்,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.காஷ்மீரின் இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும் எங்கு சென்றாலும் ஜாதி, மதம் மாநிலம், மொழி என பிரிவினை ஏற்படுத்தி குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். வெறுப்பை அன்பால் தான் வெல்ல முடியும். ஒரு பக்கம் வெறுப்பை பரப்புபவர்களும், மறுபக்கம் அன்பை பரப்புபவர்களும் உள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்தும், அவர்களின் உரிமையை கொடுத்தும் காங்கிரஸ் முன்னேற்றும்.மக்களின் விருப்பம் மற்றும் செய்ய வேண்டிய பணி குறித்த பிரச்னைகளை பார்லிமென்டில் எழுப்ப தயாராக உள்ளேன். அதற்கு மக்கள் எனக்கு அறிவுறுத்தினால் போதும். லோக்சபா தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் வலிமையாகி உள்ளன. பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார். அது அவரின் முகத்தில் தெரிகிறது. முன்பு இருந்தது போல் அவர் இல்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

GoK
செப் 24, 2024 13:27

சொந்த நாட்டுக்கும் துரோகம் செய்யத்துணிந்தவன் இவன். வேறு எந்த மண்ணிலும் இதை அனுமதிக்க மாட்டார்கள். வெளிநாடு சென்று எண்ணமெல்லாம் உளறி இருக்கிறான் இந்த வஞ்சகன்


SIVA
செப் 24, 2024 09:05

எப்படி இந்திரா பெரோஸ் கான் கொலை செய்ய பட்டபோது டெல்லியில் உங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலை எடுத்து கொண்டு டெல்லி முழுவதும் உள்ள சீக்கியர்களை தேடி பிடித்து கொலை செய்தார்களே அந்த அமைதி வழியில் அன்பை விதைக்க போகிண்றீர்களா , நூறு ஆண்டு கட்சி , ஐம்பது ஆண்டுகள் ஆளும் கட்சி, பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சி மக்கள் பிரச்னை என்ன என்று தெரியாது , இவரை ஏன் பப்பு என்று சொல்கின்றார்கள் என்று இப்போது புரிகின்றது , கடத்த பத்து ஆண்டுகளில் இவர் நூறு முறைக்கு மேல் வெளிநாடு சென்று வந்து உள்ளார் .......


Anonymous
செப் 24, 2024 08:30

எல்லா இந்தியருக்கும் 4 பாஸ்போர்ட் (இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து-UK மற்றும் அமெரிக்கா-USA அல்லது சீனா) வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்யவும்.


karunamoorthi Karuna
செப் 24, 2024 07:52

சாதி கணக்கெடுப்பு பற்றி பேச வில்லை ஏன் இவனுடைய சாதி என்ன என்று கேட்பார்கள் என்று பயந்து விட்டானா


ராமகிருஷ்ணன்
செப் 24, 2024 04:46

அதாவது அன்போடும், பாசத்தோடும் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு அள்ளி அள்ளி தரனும் இல்லை என்றால் காங்கிரஸ் புடுங்கி கொடுக்கும் அதாங்க ராகுலின் பிளான்.


அஜய் சென்னை இந்தியன்
செப் 23, 2024 23:37

காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது


வாய்மையே வெல்லும்
செப் 23, 2024 23:03

வேங்கைவயலில் மலம்கலந்த குடிநீர் மக்களுக்கு விநியோக படுத்தியது த்ராபை மாடல் தீய மூர்க்கனிடம் யார் அந்த தீங்கை செய்தார்கள் என கேட்டு தமிழக மக்களுக்கு நீதி வாங்கி தா பாப்போம்.. செய்யமாட்ட செய்யமாட்டா நீயும் டொஅப்பத்தலயனும் கூட்டுகளவாணி


Ganapathy
செப் 23, 2024 21:38

55 வழக்குகளை தன் மீது வைத்துக்கொண்டு 5000 கோடி வரிஏய்ப்பு செய்து கோர்ட்ல அழுது பெயில் வாக்கி பாராளுமன்ற எதிர்கட்சி தலைவனாக ஆன நீங்க 6 மணிநேரம் ரகசியமாக அமெரிக்காவில் யாரை சந்தித்தாய்?


Manikandan K
செப் 23, 2024 21:32

முடியலடா சாமி


Manikandan K
செப் 23, 2024 21:31

அதுவா நீங்க


சமீபத்திய செய்தி