உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதிஷுக்கு ஆதரவளிப்பேன்!

நிதிஷுக்கு ஆதரவளிப்பேன்!

பீஹாரின் சீமாஞ்சல் பிராந்தியத்துக்கு நியாயம் கிடைக்கும் என்றால், நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க தயார். எத்தனை காலம் பாட்னாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவீர்கள். சீமாஞ்சல் பிராந்திய மக்கள் இன்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இடப்பெயர்வு, ஊழல் பிரச்னைகளை சந்திக்கின்றனர். அசாதுதீன் ஒவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

தொல்லை தரக்கூடாது!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் பா.ஜ., அரசியல் நோக்கத்தோடு தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையான வாக்காளருக்கு தொல்லை தரக்கூடாது. அவர்களின் பெயர்களை நீக்கக்கூடாது. குணால் கோஷ் மூத்த தலைவர், திரிணமுல் காங்கிரஸ்

சதி நடக்கிறது!

உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் சேர்ந்து பெரிய சதி செய்கின்றனர். சமாஜ்வாதி கட்சியும், 'இண்டி' கூட்டணியும் வலுவாக இருக்கும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், 50,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளனர். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி