வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பராமரிப்பு சரியில்லையா? ரொம்ப பழையதாக இருந்தால் scrape பண்ணிவிடவும்.
சஹரன்பூர்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியின் போது அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.உ.பி.மாநிலம் சஹரன்பூர் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.இதை கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட 2 விமானிகள், சஹரன்பூர் விமான தளத்துக்கு பாதுகாப்பாக ஓட்டிச் சென்று அவசர, அவசரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் அவரசமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை விமானப்படை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும்,இது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.
பராமரிப்பு சரியில்லையா? ரொம்ப பழையதாக இருந்தால் scrape பண்ணிவிடவும்.