உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவம், விமானப்படை தளபதிகள்

தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவம், விமானப்படை தளபதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர். பெங்களூரு எலஹங்கா விமான பயிற்சி மையத்தில், நாளை(பிப்.10) முதல் பிப். 14ம் தேதி வரை 'ஏரோ இந்தியா 2025' விமான கண்காட்சி நடக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் விமானப் படைகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரோ இந்தியா கண்காட்சியையொட்டி, இந்திய விமானப்படை விமானங்களின் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் இன்று(பிப்.9) பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திலிருந்து தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர். சுமார் 45 நிமிடங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானத்தில் இரு ராணுவ தலைமை அதிகாரிகள் ஒன்றாக பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தர்
பிப் 10, 2025 04:41

தேஜஸ் விமானங்கள் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த குறிப்பாக படைவீரர்களுக்கு உணர்த்த இப்படி பயணித்துள்ளனர். No other reasons. So don't worry.


Senthoora
பிப் 10, 2025 04:23

இப்படி ஒன்னாக போனவர்கள் ஒண்ணாகவே, பரலோகம்.. கடந்தகாலத்தில் நடந்ததை மறந்துவிட்டீர்களா?


essemm
பிப் 09, 2025 20:49

இரண்டு தளபதிகளும் ஒரே நேரத்தில் எங்கும் பயணம் போகக்கூடாது அல்லவா. இது எப்படி சாத்தியம்.


M S RAGHUNATHAN
பிப் 09, 2025 20:36

It is surprising that established protocols are thrown to winds. The Defence Minister should order an enquiry forthwith.


Makkalal Khouri
பிப் 09, 2025 16:56

மோடியும் அமித்ஷாவும் போகவில்லையா


வி. ஜி. ramachandran
பிப் 09, 2025 17:20

படை தளபதிகள் ஒன்றாக ஒரே வாகனத்தில் பயணிக்க கூடாது என்று ஒரு விதி உள்ளதே. அது புறக்ணிக்கப்பட்டதா?


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
பிப் 09, 2025 20:11

அறிவாலயத்துக்கு அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாருங்க. மோடியை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை


essemm
பிப் 09, 2025 20:52

modiyum அமிவும் போவது அவர்களுடைய வேலைக்கு. அது போலவா தளபதிகள் ஒன்றாக அவர்கள் இடத்தை விட்டு போவது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை