உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துார்: பாக்., ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை!

ஆப்பரேஷன் சிந்துார்: பாக்., ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆப்பரேஷன் சிந்துார் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று, இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டன.இந்திய விமானப்படை தாக்குதலில், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை இன்று விமானப்படை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள் என்றும், மற்றொன்று மிகப்பெரிய அளவிலான ராணுவ விமானம் என்றும், விமானப்படை தலைமை தளபதி அமர்ப்ரீத் சிங் இன்று அறிவித்தார்.பெங்களூருவில் நடந்த விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில், அமர்ப்ரீத் சிங் இந்த தகவலை தெரிவித்தார். விமான நிலையத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப் 16 ரக போர் விமானங்களும் விமானப்படை தாக்குதலில் சுக்கு நுாறாக நொறுங்கின. மிகக்சிறப்பாக திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathna
ஆக 09, 2025 16:23

நாங்க பாகிஸ்தானுடன் பிரியாணி கூட்டுறவு வைத்துள்ளதால், என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 09, 2025 16:19

அதுக்கு மாறா ரபேல் உட்பட இந்திய போர்விமானங்களை வீழ்ழ்த்தியதா பன்றிஸ்தான், சீனா சொன்னதை திராவிட வந்தேறிகளையும், காங்கிரஸ் கொள்ளையர்களை நம்பவெச்சானே பன்றிஸ்தான் காரன் >>>> அவன் கில்லாடி இல்லையா >>>>


Swaminathan L
ஆக 09, 2025 15:52

ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ட்ரம்ப் பொத்தாம்பொதுவாக பல முறை சொன்னது இதைத் தானே? அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய எஃப்16 மற்றும் ஏவாக்ஸ் விமானங்கள் அவை. இவை மட்டுமல்லாமல் ராடார் உட்பட பல உபகரணங்களும் சின்னாபின்னமானது. வான் கவசம் என்று பாகிஸ்தான் எதையோ வைத்திருந்தது. அதுவும் சுக்குநூறானது. ஆயிரக்கணக்கில் அனுப்பிய ட்ரோன்களும், ஏவுகணைகளும் அதே கதியை அடைந்தன. இந்தியத் தயாரிப்பான ஆகாஷ் மற்றும் ரஷ்யக் கூட்டுத் தயாரிப்பான ப்ரமோஸ் ஏவுகணைகள் விளைவித்த நாசம் ட்ரம்ப்புக்கு இந்திய வலிமையை எடுத்துக் காட்டியிருக்கும். இந்தியா பழக்கப்படுத்திய குரங்குமல்ல, அமெரிக்கா இனிமேலும் குரங்காட்டியுமல்ல என்று புரிந்திருக்கும். நாட்டின் கஜானா துடைத்தாகிவிட்டது.பல துறைகளில் உற்பத்தி என்பது அமெரிக்காவில் நின்று போய் பல வருடங்களாகி விட்டது . இந்த நிலையில், இறக்குமதி வரி விதிப்பின் மூலமாக பல நாடுகளிலிருந்தும் பணத்தைச் சேர்க்கும் முயற்சியாகவும், அமெரிக்கப் பொருட்களை வாங்கச் சுணங்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் இந்தத் தடாலடி வரிவிதிப்பு செய்திருக்கிறார். இந்தியா இதர நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பது, உள்நாட்டில் நுகர்வை அதிகமாக்குவது என்று மாற்று வழிகளில் ட்ரம்ப்பின் வரிவிதிப்புத் தாக்கத்தை விலக்க வேண்டும்.


முதல் தமிழன்
ஆக 09, 2025 14:07

நான் ரொம்ப ஷாக் ஆகிட்டேன் ❤️


vivek
ஆக 10, 2025 08:47

ஏன் இருநூறுக்கு பதில் முன்னூறு வந்ததா...சொம்பு


Anand
ஆக 09, 2025 13:59

செல்லாது, செல்லாது, இதை நாங்கள் நம்பமாட்டோம், இந்திய அதிகாரிகள், வீரர்கள், தலைவர்கள் சொல்வதை நம்பமாட்டோம், நாங்கள் நம்புவது டிரம்ப், சோரஸ், முனீர், சீனன் போன்றவர்களின் அறிக்கைகளை மட்டுமே.. இப்படிக்கு புள்ளிராஜாக்கள்.


ஆரூர் ரங்
ஆக 09, 2025 13:39

1. பாரத தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறியத் தவறி விட்டது அமெரிக்க உளவுத்துறை. இதுவே யு எஸ் க்கு பெருத்த அவமானம். 2. எதிர்த்தாக்குதலை இந்திய ராணுவம் சேதமில்லாமல் தடுத்ததும் அமெரிக்க ஆயுதங்களின் தோல்வி. 3. பெரியண்ணனின் மறைமுகக் கட்டுப்பாட்டிலுள்ள தளங்களின் மீதும் நமது துல்லிய தாக்குதல் சர்வதேச அரங்கில் அவ‌ர்களு‌க்கு தலைகுனிவு. இதில் அவர்களது ஆட்களும் பலியாகியிருக்கலாம். 4. யு எஸ், சீன துருக்கி ஆயுத மார்க்கெட் அடிமட்டத்துக்கு செல்லும் ஆபத்து. இதெலாம் சேர்ந்துதான் ஆத்திரத்தில் TARIFF உயர்வை அறிவிக்க வைத்திருக்கலாம். மேலும் இப்போது ராகுலை தூண்டிவிட்டு பொய் நாடகங்கள் நடத்தும் இழிநிலைக்கு தள்ளி விட்டிருக்கலாம். இனிமேலாவது ஏக வல்லரசு எனும் எண்ணத்தை விடுவது உத்தமம்.


Ramesh Sargam
ஆக 09, 2025 13:35

ஆதாரம் இருக்கா என்று அந்த ராகுல் காந்தி இப்ப கேள்வி கேற்கும்.


Raja k
ஆக 09, 2025 13:32

என்னது காந்தி செத்துட்டாரா??


Palanisamy Sekar
ஆக 09, 2025 14:01

கேவலமான கருத்து பதிவு.


Anand
ஆக 09, 2025 15:49

பூமிக்கு பாரமான அந்நிய கழிசடைகள் இந்திய வீரத்தை கேலி செய்து இன்னும் இழிவாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


sankaranarayanan
ஆக 09, 2025 12:59

அதோடு மட்டும் அல்ல அமெரிக்காவால் பாகிஸ்தானில் வைக்கப்பட்டுள்ள மைண்டைன் செய்துவரும் அவர்களது பல விமானங்களும் சேதமடைந்துள்ளன விமான ஓடு தலமே சின்னாபின்னமாகி சிதறிவிட்டது இனி அதை சரிபார்த்தாப்பிறகேதான் அந்த விமான தளத்தை அமெரிக்க போர் விமானிகள் பயன்படுத்த முடியம் இதுதான் அமெரிக்க அதிபருக்கு மிகுந்த சொல்லமுடியாத கோபத்தை உண்டாக்கியது அதை எப்படி காட்டுவது சரிக்கட்டுவது என்று வழி தெரியகாமல் இந்தியாவின் மீது டேரிப் டேரிப் என்று வரிச்சுமையை அதிகரித்துள்ளனர்


Jack
ஆக 09, 2025 13:49

ஓடுதளம் அமைப்பது பெரிய காரியம் இல்லை ..அங்கே ஏர் டிராபிக் ரேடார் புட்டுக்கிட்டது தான் காரணம்