உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை முறைகேடு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது

மதுபான கொள்கை முறைகேடு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, கடந்த 2022ல் புதிய மதுபான கொள்கையை மாநில அரசு அமல்படுத்தியது; இது, மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, அப்போது கலால் துறை செயலராக இருந்த வி.கே. சவுபே, இணைச்செயலர் கஜேந்திர சிங் உட்பட மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, தற்போது பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச்செயலராக உள்ள வி.கே. சவுபே மீது வழக்குப்பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து, சவுபே மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
மே 21, 2025 16:50

ஒரு நிமிசம் நான்கூட அட பரவாயில்லையே சீக்கிரமே கைது நடவடிக்கைகளை ஆரம்பிச்சிட்டாங்கன்னு சந்தோசப்பட்டுட்டேன் அப்புறம்தான் புரியுது, வேற எங்கயோ நம்மூர்ல எப்பய்யா பட்டாசு விடப்போறீங்க?? ஒரு பெரிய பட்டாளமே உள்ள போறத வேடிக்கை பார்க்க தமிழக மக்கள் ஆர்வத்தோட இருக்காங்க.


Perumal Pillai
மே 21, 2025 14:17

Class 1 thieves. Enjoying immunity well over 78 years. The worst corrupt group.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை