உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வராயன் மலைவாழ் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்: ஐகோர்ட் எச்சரிக்கை

கல்வராயன் மலைவாழ் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்: ஐகோர்ட் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு வசதிகள் அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தாவிட்டால், தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.அடிப்படை வசதிகளை அந்த பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது. ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அடையாள அட்டை வழங்க நடத்தப்பட்ட முகாமில், 2,000க்கும் மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றை பரிசீலித்து வழங்க, மூன்று மாதங்கள் அவகாசம் தேவை என்றும், அரசு தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து, 'அடையாள அட்டைகளை வழங்குவதற்கு, மூன்று மாதங்கள் எதற்கு' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் 'சாலை வசதிகள் செய்யப்படவில்லை' என்றார்.அதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர், கல்வராயன் மலைப்பகுதிக்கு இரண்டு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், சாலைப் பணிக்காக நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.அரசு தரப்பில் அளிக்கப்படும் விபரங்கள் போதுமானதாக இல்லை எனவும், கல்வராயன் மலைப்பகுதி மக்கள் பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தும்படியும், இல்லையென்றால், தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.பஸ்கள் இயக்கம் குறித்து, விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து நிர்வாக இயக்குனர்கள் நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ, இன்று பிற்பகல் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கல்வராயன் மலைப்பகுதியில் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குவது தொடர்பாகவும், சாலை வசதிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
செப் 20, 2024 05:45

ஒன்றிய அரசை உட்டு பாஞ்சி லட்சம் போடச் சொல்லலாமே


Kasimani Baskaran
செப் 20, 2024 04:38

கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாத நீதிமன்றம் ஒரு நீதீமன்றமா என்று தீம்க்கா நிர்வாகிகள் கேள்வி கேட்க வாய்ப்பு இருக்கிறது.


சமீபத்திய செய்தி