உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொண்டையில் சிக்கியது இட்லி; ஓணம் போட்டியில் உயிரிழந்த சோகம்!

தொண்டையில் சிக்கியது இட்லி; ஓணம் போட்டியில் உயிரிழந்த சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லாரி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. மனிதனை நீண்ட காலம் வாழ வைக்கும் அமிர்தமும், ஒரு அளவுக்கு மீறினால் நஞ்சாக மாறி மனிதனைக் கொன்றுவிடும் என்பதே இந்த பழமொழியின் அடிப்படை. அது புரியாமல், முட்டாள்தனமாக உணவு உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவதும், பணத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அதில் மக்கள் பங்கேற்பதும், நம் நாட்டில் நீண்ட காலமாக நடக்கிறது. அதிக இட்லி சாப்பிடுவது, அதிக புரோட்டா சாப்பிடுவது, அதிக முட்டை சாப்பிடுவது, அதிக பிரியாணி சாப்பிடுவது, குறைந்த நேரத்தில் அதிகம் சாப்பிடுவது என போட்டிகளை விதம் விதமாக நடத்துகின்றனர். இப்படி நடத்தப்படும் போட்டிகளில் பரிசுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பங்கேற்பவர்கள் ஏராளம். அதிலும், பணம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அப்பாவிகளே அதிகம்.

சாப்பாடு போட்டி

அப்படிப்பட்ட ஒரு போட்டி தான் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் நடந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, பாலக்காட்டில் கொல்லப்புரா இளைஞர்கள் குழு சாப்பாடு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. அதிகமான இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு வழங்கப்படும் என போட்டியை நடத்தும் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதில் கிடைக்கும் பரிசுக்கு ஆசைப்பட்டு பாலக்காடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் அவசர அவசரமாக இட்லியை சாப்பிட்டுள்ளார்.அப்போது அவரது தொண்டையில் இட்லி சிக்கியது. போராடியும் இட்லியை விழுங்க முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து சுள்ளிமடை வார்டு உறுப்பினர் மின்மினி கூறியதாவது: சுரேஷ் ஒரேநேரத்தில் மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது. மூச்சுவிட முடியாமல் திணறினார்.

நடவடிக்கை எடுங்கள்!

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து வாளையாறில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். சுரேஷ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இத்தகைய போட்டிகளை நடத்துவோர் மீதும், அதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
செப் 15, 2024 12:10

நாட்டுல மக்கள் தொகை போய்க்கிட்டு இருக்குற வேகத்தில் இப்படி அவ்வப்போது சம்பவம் நடந்தால் மட்டுமே பூமி தாங்கும் ......


விஜய்
செப் 15, 2024 12:01

காசுக்கு அலையறவனுக்கு இதுதான் தண்டனை


Rajah
செப் 15, 2024 10:05

மலையாள உடன் பிறப்புகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்த முதல்வர் அந்தக் குடும்பத்திற்கு குறைந்தது 5 இலட்ச்சம் நஷ்டஈடு கொடுப்பார். இந்து மத தமிழர் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கமாட்டார். அது சமூக நீதிக்கு எதிரானது. இதை ஏன் இன்னும் தமிழர்கள் புரிந்து கொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை.


Mali
செப் 15, 2024 09:22

படிப்பு அறிவு உள்ள மாநிலத்துல இப்படி ஒரு நடத்த எப்படி உண்டியல் குலுக்கி அனுமதி கொடுத்தாங்க? இதே எங்க ஊருல நடந்தால், ஏவல் துறை, ஊடுக நக்சலைட்டுகள் இந்த கேஸ் மூடி மறைத்துஇருக்கும்.


புண்ணியகோடி
செப் 15, 2024 08:55

இப்டி போட்டி நடத்திய மடையர்கள் எல்லோரையும் கொலைக்கேசில் அரஸ்ட் பண்ணினால் போதும். ஒரு ஊரில் இப்படி நடந்தால் அப்புறம் எந்த ஊரிலும் போட்டி நடக்காது. கவர்ன்மென்ட் செஞ்சாத்தான் எல்லாம் அடங்குவாங்க


sridhar
செப் 15, 2024 08:11

இப்படிப்பட்ட Arivu கெட்ட உணவு உண்ணும் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும், முன்பு டெல்லியில் மாணவர்கள் இடையில் கோகோ கோலா அருந்தும் போட்டியில் சில மாணவர்கள் இறந்தார்கள்.


A Viswanathan
செப் 15, 2024 08:35

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.இதே மாதிரியான போட்டி நடத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2024 08:44

கோகோ கோலா அதிகம் அருந்துவதால் ரத்தத்தில் கார்பன் டாய் ஆக்ஸைடு மிகவும் அதிகரித்து ஆக்சிஜன் மிகவும் குறைந்து போய்விடும் ..... ஆகவே தில்லி மாணவன் உயிரிழந்ததில் வியக்க எதுவுமில்லை .... அதை தற்கொலை என்றே கூறலாம் .....


சமீபத்திய செய்தி