உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைவர் காங்., மேலிடம் இல்லையென்றால் வேறு யார்: கார்கேவுக்கு பா.ஜ., கேள்வி

தலைவர் காங்., மேலிடம் இல்லையென்றால் வேறு யார்: கார்கேவுக்கு பா.ஜ., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என அக்கட்சி தலைவர் கார்கே கூறியதை விமர்சித்துள்ள பா.ஜ., கட்சி தலைவர் மேலிடம் இல்லையென்றால், வேறு யார் என கேள்வி எழுப்பி உள்ளது.காங்கிரஸ் தலைவர் கார்கே நிருபர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த கார்கே, ஆட்சி மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் உண்டு. கட்சி மேலிடத்தில் என்ன நடக்கிறது என்பதை இங்கு யாரும் சொல்ல முடியாது. அவர்களின் முடிவுக்கு உட்பட்டது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், கட்சி மேலிடத்துக்கு இருக்கிறது. தேவையில்லாமல், யாரும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றார்.இதனை விமர்சித்துள்ள பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ''காங்கிரஸ் மேலிடம் பேய் போன்றது. அதனை யாரும் பார்க்க முடியாது. கேட்க முடியாது. ஆனால், உணர முடியும். காங்கிரஸ் மேலிடம் என அக்கட்சி தலைவர் என மக்கள் கருதும் நேரத்தில் அவர், அதன் பெயர் குறித்து கிசுகிசுக்கிறார். தான் இல்லை என சொல்கிறார்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
ஜூலை 01, 2025 04:02

கட்சித்தலைவர் பிளாஸ்டிக் சேர் வகையறா என்பதால் அவருக்கும் மேலிடம் உண்டு என்பதை சூசகமாக தெரிவிக்கிறார். மோடி பாராளுமன்றத்தில் சொன்னது போல தில்லாலங்கடி வேலை செய்வதில் கார்கே ஒரு நிபுணர்.


theruvasagan
ஜூன் 30, 2025 22:06

அதாது இவர் தான் மேலிடம் இல்லை. வெறும் வெற்றிடம் என்று சொல்கிறார் போல.


Iyer
ஜூன் 30, 2025 21:34

*சசி தாரூரை தலைவராகினால் அவர் தலைமேல் உட்கார்ந்து குடும்பத்துக்கே வேட்டுவைத்துவிடுவார் என்று பயந்துதான் - இந்த ஊழல் குடும்பம் - கட்கே என்ற எடுபுடியை தலைவராக்கி உட்கார்த்திவைத்துள்ளது. *காங்கிரஸ் கட்சியின் பெயரில் ஆயிரங்கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. * வேறு திறமை மற்றும் நேர்மையான எவரும் தலைவரானால் இந்த ஊழல் குடும்பத்தால் அந்த சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கமுடியாது. * ஆகையால் இந்த ஊழல் குடும்பத்தில் இருந்து ஒருவரோ அல்லது அவர்கள் சம்மதம் பெற்ற ஒரு எடுபுடியைத்தவிர வேறு எவரும் காங்கிரஸ் தலைவராக ஒருபோதும் முடியாது.


V Venkatachalam
ஜூன் 30, 2025 20:34

கான் கிராஸ் கட்சின்னு ஒண்ணு இருக்கா? அதை பாடையில் படுக்க வச்சி வருஷ கணக்கா ஆயிடுச்சே. கையில் இருக்கிற டமாரத்தை கீழே போட முடியாமல் அதை அடித்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவுதான்..


Santhakumar Srinivasalu
ஜூன் 30, 2025 19:03

இவர் கட்சி மேலிடம் இல்லையென்றால் வேறு யார்? எதுக்கு இந்த அதிகாரம் இல்லாத பதவி?


Rajan A
ஜூன் 30, 2025 18:36

காங், கட்சி மேலிடம் மூளை காலி தான். இவர்கள் வந்தாலே பக்கோடா செலவுனு வர சொல்வதே இல்லை. போயும் போயும் பப்புவிடம் ஆலோசனை கேட்டால் எப்படி உருப்படும். மேடம் இல்லை என்றால் பப்புவிற்கு டாடா, குட்பை தான்


பேசும் தமிழன்
ஜூன் 30, 2025 18:30

அப்போ.... இவர் சும்மா.... உப்புக்கு சப்பாணியா ???


A viswanathan
ஜூன் 30, 2025 21:10

இத்தாலி மாஃபியாவின் அடிமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை