உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணமிருந்தால் தேர்வு முறையை விலைக்கு வாங்கலாம்: ராகுல் குற்றச்சாட்டு

பணமிருந்தால் தேர்வு முறையை விலைக்கு வாங்கலாம்: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பணமிருந்தால் தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும்; பணம் இருந்தால் இந்திய தேர்வு முறையை விலைக்கு வாங்கிவிடலாம்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gc0amtpk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்லி., கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்பி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: வினாத்தாள் கசிவு விவகாரம் நமது தேர்வு முறையில் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பணம் இருந்தால் போதும்; இந்திய தேர்வுமுறையை விலைக்கு வாங்கிவிடலாம் என பலரும் நினைக்கின்றனர். பணமிருந்தால் தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறுகளை மத்திய அரசு வேறு பக்கம் திருப்ப பார்க்கிறது. இந்திய தேர்வு முறையே பெரிய மோசடி. நீட் மட்டுமின்றி அனைத்து பெரிய தேர்வுளை நடத்துவதிலும் பிரச்னைகள் உள்ளன. அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒவ்வொருவரையும் குற்றம் சாட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இனி தவறுகள் நடக்காது

ராகுலுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: ''முந்தைய காங்கிரஸ் அரசு கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர தவறிவிட்டது. காங்கிரஸ் அரசின் தவறுகளை எங்கள் அரசு சரி செய்து வருகிறது. பொதுத்தேர்வு மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு ஏன் கொண்டுவரவில்லை? தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காது என அரசு உறுதியளிக்கிறது''. இவ்வாறு பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

R.Varadarajan
ஜூலை 23, 2024 20:42

தகுதி இல்லாமலே துட்டு கொடுத்தால் பணமேட்டை அரசியில் வாதிகள் நடத்தும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் கோடிக்கணக்கில் முட்டஆய் துட்டு கொடுத்து மருத்துவப்படிப்புக்கு உடங்களை விலைக்கு வாங்கலாம் என்பதைத்தான் பரம்பரை பணக்கார பப்பு சொல்கிராரா? முட்டாய துட்டு கொடுக்காமலேயே தகுதி வாய்ந்த வசதி இல்லாத ஏழை மாணவர்கள் மருத்துவப படிப்புக்கு வசதி செய்யும் நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துகிராரோ?


P. Siresh
ஜூலை 23, 2024 05:56

ராகுல் காந்தி கருத்து தவறானது.தவறுகள் எல்லா ஆட்ச்சிகளிலும் நடக்கிறது.இவர்கள் ஆட்சி உத்தம ஆட்சி போல கூறுகிறார்.௨ஜி ,ரெயில்வேயில் வேலைக்கு நிலம் போன்ற பல ஊழல்கள் இவர்களது கூட்டணி ஆட்சியில் நடந்து உள்ளது.இவரது கட்சி தலமையையே இவரால் ஏற்று நடத்த முடியவில்லை இதில் ஊழல்.அதிகாரம் ஒருவரிடம் கொடுத்து விட்டு ஆளுமையை இவர் அனுபவித்து கொண்டு இருக்கிறார்.பித்தலாட்டம்


Vijayakumar Srinivasan
ஜூலை 22, 2024 23:30

இது ஒன்றும் புதியது அல்ல.பணம்.அரசியல்பலம்.ஜாதி.இதைவைத்துதான்எல்லாம்முடிவாகிறது.என்பது.எல்லோருக்கும்தெரியும்.புதிதாகசொல்ல.ஒன்றும்இல்லை.இதைகளையவழிசொன்னால்நலம்


THERESHM P.M.PERUMAL
ஜூலை 22, 2024 21:58

பணம் இர்ருந்தால் யாரை வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்க முடியும் காங்கிரஸ் ஆட்சி செய்தால் பிஜேபி ஆட்சியில் சாத்தியம் இல்லை


Sekar Spm
ஜூலை 22, 2024 20:02

பணத்தை கொடுத்து ஆட்சியையே விலைக்கு வாங்குகிறார்கள் தேர்வு முறையை வாங்குவதா பெரிது? இது ராகுலுக்கு தெரியாதா என்ன.. இதைப் பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் அவர்கள் கேள்வி எழுப்பலாமே..


Dharmavaan
ஜூலை 22, 2024 19:09

பணத்தால் தேர்தல்களை விலைக்கு வாங்கும் ராகுல்கான் கூட்டம் இதை பேச அருகதை இல்லை


GMM
ஜூலை 22, 2024 18:44

அரசு ஊழியர்கள் தேர்வில் கல்வி, மதிப்பெண், சாதி மட்டும் போதாது. தனி மனித ஒழுக்கம், சமூக, குடும்ப பின்புலம் அறிய வேண்டும். காங்கிரஸ் வகுத்த இட ஒதுக்கீடு வாக்கு வங்கி உருவாக்க முடியும். நல்ல குடிமகனை உருவாக்க முடியாது. இனியும் பொது தேர்வு முறையில் குறை உருவாகும். அரசியல் ஆதரவு பெற்ற உள்நாட்டு தேச விரோதிகள் அதிகம். மத்திய அரசு வினா கசிவில் இல்லை. பணியாளர்கள் தேர்வு முறையை மாற்ற ராகுல் கூற வேண்டும். இட ஒதுக்கீடு, வாக்குரிமை முறை மாற வேண்டும்.


Swaminathan L
ஜூலை 22, 2024 16:15

முன்பு பணமிருந்தால், மெடிகல் சீட்டுகளை லம்ப்பாக விலைக்கு வாங்க முடிந்ததே.


Rajarajan
ஜூலை 22, 2024 16:06

திருமதி. நளினி சிதம்பரம் எங்கே ?? அவரது கருத்தை எந்த காங்கிரஸ்வாதியும் கேட்காதது ஏன் ? ஏன் ? ஏன் ?


samvijayv
ஜூலை 22, 2024 16:00

பின்ன.., இந்திராகாந்தி வீட்டில் பிறந்தால் அதன் வழியில் வருகிற அனைத்து நபர்களும் காங்கிரஸ் தலைவர் அகலாமே.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி